எல்லோரும் பாட்டுப் பாடுங்கள்! | ஆரோக்கியப் பொழுதுபோக்கு

எல்லோரும் பாட்டுப் பாடுங்கள்! | ஆரோக்கியப் பொழுதுபோக்கு
Updated on
2 min read

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும். இது பழமொழி. வாய் விட்டுப் பாடினாலும் நோய் விட்டுப் போகும் என்பது மருத்துவ உலகம் கூறும் புதுமொழி. இளைய தலைமுறையினர் ஆர்வத்துடன் பாடவும், அவற்றை ஷேர் செய்யவும் ரியாலிட்டி ஷோக்களும் சோஷியல் மீடியாக்களும் கைகொடுக்கின்றன.

சரி, எப்போதும் வேலை வேலை என்று அலுவலகத்திலும் குடும்பத்திலும் பிஸியாக இருப்பவர்களுக்குப் பாடி தங்கள் ஆசையைத் தீர்த்துக்கொள்ளும் வாய்ப்புகள் இருக்கின்றனவா? இருக்கின்றன. இதற்கென்றே சென்னையில் இன்று ஏராளமான கரோக்கி மியூசிக் ஸ்டுடியோக்கள் பெருகிவிட்டன.

இவற்றில் முன்னோடியான ஒரு கரோகி ஸ்டுடியோ, ‘பயோனீர் மியூசிக் ஜிம்’ (பிஎம்ஜி). இதன் உரிமையாளர் ‘பயோனீர்’ சுரேஷ், இசையமைப்பாளர் தேவாவிடம் 1997-2002 காலக்கட்டத்தில் 150 படங்களில் ரிதம் புரோகிராமராகப் பயணித்த இசைக்கலைஞர்.

சமூக ஊடகங்கள் வேரூன்றத் தொடங்கியது முதலே செயலி வழியாகப் பாடல்கள் பாடும் கான்செப்ட் அறிமுகமாகி விட்டது. 70களின் தொடக்கத்திலேயே கரோக்கி அறிமுகமானாலும், இந்தியாவில் புத்தாயிரத்துக்குப் பிறகுதான் ஒலிக்க ஆரம்பித்தது. ஒரு பாடலை ஒரிஜின லாகப் பாடியவர்களுக்குப் பதிலாக வேறொருவர் பாடி மகிழ்வதுதான் இந்த கரோக்கி கான்செப்ட். சென்னைக்கு இது எப்படி வந்தது?

இசை சுற்றுலா

“இசை நிகழ்ச்சிக்காக உலகச் சுற்றுலா செல்வது வழக்கம். இதுபோன்ற நிகழ்ச்சி களுக்குச் சென்றபோதுதான் தொழில்முறைப் பாடகர்களைத் தவிர்த்து ஏராளமானோர் பாடும் திறமையுடன் இருப்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in