‘கிரிஞ்’சா இருக்கலாமா? | ரீவைண்ட் முதல் ரீல்ஸ் வரை 3

‘கிரிஞ்’சா இருக்கலாமா? | ரீவைண்ட் முதல் ரீல்ஸ் வரை  3
Updated on: 
2 min read

இன்றைய தலைமுறைக்கும் நம் குழந்தைகளுக்கும் உறவுகள் தெரியாமல் போனதற்கு நாமும் ஒரு காரணம். இது எப்படி நிகழ்ந்தது? உலகமயமாக்கலுடன் (Globalisation) தொடர்புடைய பொருளாதார, சமூக மாற்றங்கள், வேலைவாய்ப்புக்காக இடம்பெயர்தல், தனிக்குடும்பங்களின் அதிகரிப்பு எனப் பல காரணங்களால் கூட்டுக்குடும்ப வாழ்க்கை குறையத் தொடங்கியது.

குடும்பக் கட்டுப்பாட்டு முயற்சிகள், பொருளாதாரச் சூழல், வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவற்றால் பல குடும்பங்கள் ஓரிரு குழந்தைகளோடு நின்றுவிடுகின்றன. மூன்று குழந்தைகள் உள்ள குடும்பங்களைப் பார்ப்பதுகூட இப்போது அரிது.

இதனால் முன்பிருந்ததைப் போல ஏராளமான சித்தப்பாக்கள், அத்தைகள், மாமாக்கள் என்று உறவுகள் சூழ்ந்து வளரும் வாய்ப்பு பல குழந்தைகளுக்குக் குறைந்துவிட்டது. இப்போது பல வீடுகளில் எல்லா உறவுகளின் கதாபாத்திரத்தையும் அப்பா, அம்மாவே ஏற்க வேண்டியிருக்கிறது!

வீட்டிலேயே குழந்தைகள்

இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்கிறேன். பல வீடுகளில் இப்போது உறவினர்களின் நல்லது கெட்டதுக்குக்கூட குழந்தைகளை அழைத்துச் செல்வதில்லை. “ஏங்க... பையனைக் கூட்டிட்டு வரலையா?” என்று கேட்டால், “அவனுக்கு ஸ்கூல் இருக்குல்ல” என்பார்கள்.

“என்ன படிக்கிறான்?” “நாலாவது படிக்கிறான்.” அடேங்கப்பா! நாலாவது படிக்கிற பையனை பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதுற மாதிரி வீட்டிலேயே உட்கார வச்சிருக்கீங்களே! கல்வி முக்கியம்தான். அதில் மாற்றுக் கருத்தில்லை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in