எழுதினால் கிடைக்கும் உற்சாகம்!

எழுதினால் கிடைக்கும் உற்சாகம்!
Updated on
2 min read

உங்களை நேர்மறையாகவும் உற்சாகமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் எனத் தோன்றுகிறதா? அதற்கு ‘Blessing journal or Gratitude journal’ உதவுகிறது. எப்படி?

நாள்தோறும் உங்களுக்குக் கிடைக்கும் வெகுமதிகள், நேர்மறையான நிகழ்வுகள், உங்கள் வேண்டுதலுக்குக் கிடைத்த பலன்கள் என அனைத்தையும் எழுதி வைக்கலாம்.

இதற்காகவே இணையதளத்தில் பிரத்யேக நோட்டுப் புத்தகங்கள் பல வண்ணங்கள், மாடல்களில் விற்பனையாகின்றன. பரிசுப் பொருள் விற்பனை செய்யும் கடைகளிலும் கிடைக்கின்றன. இவற்றைத் தாண்டி ‘Blessing journal’ அல்லது ‘Gratitude journal’இன் இணையத்தில் உள்ள பிரத்யேகச் செயலிகளிலும் எழுதலாம்.

இந்தச் செயலியைத் திறன்பேசியில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம். அதில் அன்றாட நிகழ்வுகளை எழுதலாம். ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு உடல், மன ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும் வகையில், நேர்மறையான சூழலை ஊக்குவிக்கும் வகையில் இந்தச் செயலிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நம் எண்ணங்கள், உணர்வுகளை நாமே புரிந்துகொள்ள இவை உதவுகின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in