கண்ணெதிரே மிஸ்டர் எக்ஸ்! - எனக்கு மட்டும் ஏன்? | தருணம் 19

கண்ணெதிரே மிஸ்டர் எக்ஸ்! - எனக்கு மட்டும் ஏன்? | தருணம் 19
Updated on
2 min read

மனித குலத்தின் சிறப்புக் குணங்களான ரீல்ஸ் போடுதல்; அரசியல் பார்வையாளராகவும், சமூக ஆர்வலராகவும் மாறுதல், அன்னதானத்தில் தக்காளி சாதம் வழங்குதல் போன்ற வரிசையில் ‘துரோகம் செய்தல்’ என்னும் குணமும் உண்டு.

இதைப் ’போட்டுக் கொடுத்துட்டாங்க...’; ’முதுகுல குத்திட்டாங்க..’ என்றும் சொல்லி மகிழலாம்! எப்படிச் சொன்னாலும், உங்கள் ஆத்மாவைக் கொலை செய்யும் முயற்சி அது. மரண வேதனையை மிஞ்சும் வேதனைக்குப் பிறகு, நீங்கள் நீங்களாகவே இருக்க மாட்டீர்கள்.

உங்கள் நிழலைவிட அதிகமாக நீங்கள் நம்பிய ஒருவர், பின்னாலிருந்து உங்களுக்கு எதிராகச் சதி வேலைகள் பார்த்தது தெரிய வரும்போது, வலியில் கண்ணீரும் தோன்றாது. ’எனக்கு மட்டும் ஏன்?’ வார்த்தைகளும்கூட தோன்றாது.

நாம் இல்லாதபோது நம்மைப் பற்றி இழிவாகப் பேசி மட்டம் தட்டும் குறைந்தபட்ச துரோகத்திலிருந்து, நம் உன்னத உணர்வுகளை, உறவுகளைக் கொல்லும் மாபெரும் துரோகம்வரை துரோகத்தின் பட்டியல் நீண்டது. அன்பான இவ்வுலகம் துரோகிகளாலும் நிறைந்துள்ளது.

எந்தக் கோழியும், தான் தப்பிக்கும் நோக்கில் இன்னொரு கோழியைத் தனக்கு முன்னால் தள்ளி, அதை சிக்கன் 65 ஆகவோ, தந்தூரி சிக்கனாகவோ மாற்றுவதில்லை. முதுகில் குத்தி அந்த மனிதருக்கு வாழ்க்கையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது மனிதர்களுக்கே உரிய பாரம்பரியமான கலை.

வள்ளுவர் காலத் துரோகிகள்

‘அமர் அகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை’ என்னும் நிலையில் இருந்திருக்கிறார்கள். இதன் பொருள், ’போர்க்களத்தில் அம்போன்னு விட்டுட்டுப் போகும் குதிரையை நம்புவதைவிட, அதாவது ‘டீ வாங்கித் தரேன்னு கூட்டீட்டுப் போய், பில்லை நம் தலைல கட்டிட்டுப் போகிற ஒரு ‘டியூட்’டை நம்புவதைவிட, தனிமையில ரீல்ஸ் பாக்குறது நல்லது’ என்பதே.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in