நழுவிப் போன கணங்கள்! - எனக்கு மட்டும் ஏன்? | தருணம் 18

நழுவிப் போன கணங்கள்! - எனக்கு மட்டும் ஏன்? | தருணம் 18
Updated on
3 min read

இது வர்ஷினி. “ஏதோ இருக்கேன்மா.. நீங்க, அப்பா எல்லாரும் ஓகேவா? பி.ஜி. பத்திப் பேசாதம்மா, தண்ணியை இங்க சாம்பார்னு சொல்றாங்கம்மா. கோந்து உருண்டைதான் இங்க பொங்கல்! ரூம்ல தூக்கம் வேற டிஸ்டர்ப் ஆகுது. ஃபிரண்ட் நைட்ஷிஃப்ட் போறா. அவ கிளம்புறதுக்காக அலாரம் வச்சு, லைட் போட்டு, எனக்குத் தூக்கம் போகுது... ஊருக்கு வந்து ஆசை தீரத் தூங்கணும்போல இருக்கு.”

நல்ல சாப்பாடு இன்றி, தூக்கம் கெட்டு, விடுமுறை நாள் ஆம்னி பேருந்தில் அதிக விலைக்கு சீட் வாங்கியோ, அரசுப் பேருந்துகளில் முண்டியடித்தோ, ஊர் எல்லைவரை ஆமை வேகத்தில் நகரும் ஆயிரக்கணக்கான வாகனங்களை வெறித்து, “இன்னிக்கு நைட்டுக்குள்ள ஊர் எல்லையைத் தாண்டீருவ நீ?” என்று புதுப்பேட்டை ரீல்ஸ் அனுப்பிக்கொண்டோ, நிறைய வர்ஷினிகளும் வர்ஷர்களும் நகரங்களில் இருக்கிறார்கள்.

வெளியூரில் இருக்கும்போதுதான் தெரிகிறது, ஊரில் அம்மா கையால் சாப்பிட்டது அறுசுவை உணவு அல்ல, அதையும் தாண்டிய அன்புச்சுவை உணவு என்று. அப்போது ஆயிரம் நொட்டை பேசிய வாய் இப்போது, “அம்மா, உங்க பாதங்களை உடனடியா போட்டோ எடுத்து அனுப்புங்க...” எனும்போது, பி.ஜியில் பேர் தெரியாத உணவை வாயில் வைக்கும்போது, “என் குடும்பம் என்னை அப்படித் தாங்குமே.

இப்போ என் கதி?” அந்தப் பெருமூச்சுக் கணத்தில் தோன்றாதா? ‘எனக்கும் மட்டும் ஏன்?’ இதையும், கடந்த கட்டுரையான “எல்லாரையும் அவரவர் எல்லைக்கு உள்பட்ட தொழில் சார்ந்த உயரத்துக்கும், வாய்ப்பிருந்தால் அதைவிட அதிகமான உயரத்துக்கும் வாழ்க்கை அழைத்துச் செல்லும்” என்கிற கருத்தையும் ஒன்றிணைப்போம்.

மேம்போக்காகப் பார்த்தால், அந்தக் கட்டுரை தொழில்சார்ந்த உச்சம், இந்தக் கட்டுரையின் தொடக்கம் கையில் சோற்றுத்தட்டுடன் நிற்கும் பரிதாபம். இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலத்தான் தெரியும்.

ஆனால், இது வேறு உச்சத்தை நோக்கிய பயணமாக இருந்தால்? அப்படியானால் மேலும் உச்சங்கள் இருக்கின்றனவா? இருக்கின்றன! குடும்பத்தை நேசிக்கும் ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவிடுகிறார் என்றால், அதுதான் அவரது குடும்ப வாழ்க்கையின் உச்சம். குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் நல்ல நிலையில் இருந்து, அனைவரும் ஒன்றாகவும் இருக்கிறார்கள் என்றால், அதுதான் குடும்ப வாழ்வின் உச்சம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in