ரேவந்த்: டிஜிட்டல் ஹீரோ!

ரேவந்த்: டிஜிட்டல் ஹீரோ!
Updated on: 
2 min read

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட, தீவிரமாகப் பதப்படுத்தப்பட்ட உணவுப் பண்டங்கள் உண்மையில் ஆரோக்கியமானவையா அல்லது விளம்பர உத்தியா? இந்தக் கேள்வியை இந்தியாவின் லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் எழுப்பி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர் ரேவந்த் ஹிமத்சிங்கா. சமூக ஊடகத்தில் ‘ஃபுட் பார்மர்’ (FoodPharmer) என அறியப்படுகிறார்.

கொல்கத்தாவைச் சேர்ந்த ரேவந்த், நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டெர்ன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் வணிகப் படிப்பையும், வார்ட்டன் உயர்கல்வி நிலையத்தில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர். 22 வயதில், ‘Selfieconomics’ என்கிற நூலை எழுதினார்.

மெகின்சி நிறுவனத்தில் ஆலோசகராகக் கைநிறைய சம்பளத்துடன் அமெரிக்காவில் வசித்துவந்தார். இடையில், ஊட்டச்சத்து பற்றிய குறுகிய காலப் படிப்பையும் முடித்தார்.

அப்போதுதான் இந்தியாவின் உணவுப் பழக்கவழக்கங்கள், குழந்தைகளுக்கு விற்கப்படும் போலியான உணவுப் பொருள்கள் பற்றிக் கண்டுணர்ந்தார். தொடர்ச்சியாக, சொகுசு வேலையைத் துறந்துவிட்டு முழுநேர சமூகப் பணியாளராக மாறத் தீர்மானித்தார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in