

தொழில்நுட்பத்தைக் கையாள்வதில் கில்லியாக இருக்கும் 90ஸ் கிட்ஸ் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப எண்ணற்ற சமூக வலைத்தளப் பக்கங்களைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.
குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் (ஐடி) துறையில் பணிபுரியும் இளைஞர்கள் அலுவலகம், ரிலேஷன்ஷிப் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்ளவே பல சமூக வலைத்தளக் கணக்குகளை வைத்துள்ளனர்.
அந்த வகையில் அண்மையில் ‘மெட்ராஸ் டெக்கீஸ்’ (Madras Techies) என்கிற பக்கத்தில் வெளியான ஒரு பதிவு உலக அளவில் கவனம் பெற்றது. தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளான ஓர் அதிகாரி, அதனால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலை அதில் பகிர்ந்துகொண்டிருந்தார்.
மற்றவர்களுடைய வாழ்வாதாரத்தில் தாக்கத்தைச் செலுத்தும் முடிவை எடுக்கவேண்டிய சூழலில் ஏற்பட்ட அவருடைய மனப்போராட்டம் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
இதுபோன்ற உணர்வுபூர்வப் பதிவுகள் மட்டுமல்ல, எண்ணற்ற சுவாரசியமான விஷயங்களும் இந்தப் பக்கத்தில் பகிரப்படுகின்றன. இந்தப் பக்கத்தை நிர்வகிக்கும் நவநீத பாபு, ஐடி ஊழியர். எதற்காக இதுபோன்ற பக்கங்கள் தொடங்கப்படுகின்றன?