உலகை ‘உலுக்கிய’ பதில்! | திருப்புமுனைத் தருணம்

உலகை ‘உலுக்கிய’ பதில்! | திருப்புமுனைத் தருணம்
Updated on
2 min read

சென் அப்போது ஒரு சிறுமி. தான் ஒரு பெண் என்கிற எண்ணம் சென்னுக்கு எப்போதும் வந்ததில்லை. தன்னை ஓர் ஆண் போலவே கருதிக்கொண்டாள். வீட்டிலும் அப்படித்தான் வளர்க்கப்பட்டாள்.

தன் வயதுடைய சிறுமிகளோடு விளையாடு வதைவிடச் சிறுவர்களோடுதான் விளையாடிக் கொண்டிருப்பாள், சுற்றிக்கொண்டிருப்பாள்.

இப்போது சிறார் பருவத்தைக் கடந்து பதின்பருவத்தில் சென் இருந்தார். அப்போதுதான் உள்ளூர் அழகிப் போட்டிகளில் மக்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியிருந்தார்.

சிலருக்கு ஏதோ ஒரு வகையில் திருப்புமுனை நடக்கும் அல்லவா? சென்னுக்கு அது 18 வயதில் நடந்தது. ‘ஃபெமினா மிஸ் இந்தியா’ அழகிப் போட்டியில் பங்கேற்ற அவர், யாரும் எதிர்பாராத வேளையில் பட்டத்தை வென்றார். ஏனெனில், இறுதிச் சுற்றில் அவருக்கு எதிராகச் சமப்புள்ளிகளோடு இருந்தது யார் தெரியுமா? ஐஸ்வர்யா ராய். அவரைப் பின்னுக்குத் தள்ளிதான் சென் பட்டம் வென்றார்!

மிஸ் இந்தியா பட்டம்

‘ஃபெமினா மிஸ் இந்தியா’ பட்டம் வென்றது சென்னுக்கு இன்னொரு திசைவழியைக் காட்டியது. அந்தப் பட்டம் வென்றது, அவருக்குப் பிரபஞ்ச அழகிப் போட்டியில் (Miss universe) பங்கேற் பதற்கான வாசல் கதவைத் திறந்தது.

அதற்கு முன்பு இதுபோன்ற போட்டிகள் நடப்பதுகூட இந்தியர்களுக்குத் தெரியாது. அது 1994. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில்தான் பிரபஞ்ச அழகிப் போட்டிக்கு ஏற்பாடுகள் நடைபெற்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in