பிராம்ப்ட்>- காட்டும் வழி சரியா? | ஏஐயின் இன்னொரு முகம்

பிராம்ப்ட்>- காட்டும் வழி சரியா? | ஏஐயின் இன்னொரு முகம்
Updated on
2 min read

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வேலைகளைப் பறிக்கும் எனப்படுகிறது. இல்லை, ஏஐ நுட்பத்தைப் பயன்படுத்தத் தெரிந்தவர்களால் இது நிகழும் என்றும் சொல்லப்படுகிறது. ஆக, புதிய திறனாக ஏஐ கருவிகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. அண்மையில் இணையத்தில் இது தொடர்பாக வைரலாகப் பரவி, பெரும் விவாதத்தை ஏற்படுத்திய ’மாட் ஷுமர்’ என்பவர் எழுதிய கட்டுரை இதையே வலியுறுத்துகிறது.

கற்றுக்கொள்ளுங்கள்

‘மிகப்பெரிதாக ஏதோ ஒன்று நிகழ்கிறது’ எனும் தலைப்பில் அமைந்த அந்தக் கட்டுரையில், எதிர்காலத்தில் கணினித் திரை சார்ந்த பணிகள் தானியங்கிமயமாக்கப்பட்டு விடும் என மாட் ஷுமர் எச்சரிக்கிறார். ஏஐ சேவைகள் பெரிதும் மேம்பட்டு வருகின்றன.

எண்ணிலக்கத் (டிஜிட்டல்) தன்மை கொண்ட, ஒரே மாதிரியான, நன்கு வகுக்கப்பட்ட பணிகளை அவை திறம்படச் செய்து முடிக்கும் திறனைக் கொண்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டுரையில் ஷுமர் குறிப்பிடும் மற்றொரு முக்கிய அம்சம், ஏஐ சேவைகளின் பெரும்பாலான குறைகள், அவற்றின் பழைய மாதிரிகளில் இருந்தவை, இப்போது அவை மேம்படுத்தப்பட்டு விட்டன என்பதாக அமைகிறது.

ஆக, ஏஐ சேவைகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள் என்றே ஷுமரும் சொல்கிறார். ஏஐ கருவிகள் என வரும்போது பலவிதங்கள் இருக்கின்றன, அவற்றுக்கான திறன்களும் பலவிதமாக அமைகின்றன. என்றாலும், பொதுவாக ஏஐ சாட்பாட்களுடன் சரியான முறையில் பேசத் தெரிந்தால் போதும், அவற்றிடமிருந்து உகந்த தீர்வுகளையும் பலன்களையும் பெற முடியும் என்றும் சொல்லப்படுகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in