தானாக வரும் வார்த்தைகள் நல்லதா? | ஏஐயின் இன்னொரு முகம்

தானாக வரும் வார்த்தைகள் நல்லதா? | ஏஐயின் இன்னொரு முகம்
Updated on
2 min read

artificial intelligence‘ஆட்டோ கம்ப்ளீட்’ வசதியை அதிசயம் என்றோ, தட்டச்சு செய்வதற்கு முன் எப்படிக் கணினிக்கு நம் மனதில் நினைக்கும் வார்த்தைத் தெரிகிறது என்றெல்லாம் இப்போது யாரும் வியப்பதில்லை. அந்த அளவுக்கு இந்தச் சேவை கணினிகளிலும் திறன்பேசிகளிலும் இயல்பாகப் பயன்படுத்தப்படுகிறது.

வார்த்தைகளைக் கணிக்கும் வசதியாகக் கருதப்படும் ‘ஆட்டோ கம்ப்ளீட்’ செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சேவைகளுக்கான எடுத்துக்காட்டு என்பது மட்டுமல்ல, ஏஐ பயன்பாட்டில் உள்ள போதாமைகளைச் சுட்டிக்காட்டும் சேவையாகவும் அமைகிறது. அதோடு, ஏஐ பயன்பாடு தொடர்பான அடிப்படை உண்மையையும் புரியவைப்பதாக அமைகிறது.

தானியங்கி நிறைவு எனப் புரிந்துகொள்ளக்கூடிய ஆட்டோ கம்ப்ளீட் சேவை, சொல் அல்லது சொற்றொடரின் எஞ்சிய பகுதியை முன்வைக்கக்கூடிய ஒரு மென்பொருள். பிரவுசர், தேடியந்திரங்கள், திறன்பேசி எனப் பெரும்பாலான இடங்களில் இந்த வசதியை எதிர்கொள்ளலாம்.

சொற்களைத் தவறாகத் தட்டச்சு செய்யும்போது தானாகத் திருத்தும், ஆட்டோ கரெக்ட் சேவையை இதன் சகோதர சேவையாகக் கருதலாம். இந்த இரண்டு சேவைகளும் நெருங்கிய தொடர்புகொண்டவை. என்றாலும் முக்கிய வேறுபாடு கொண்டவை.

தானாக வாக்கிய அமைப்பு: ‘ஆட்டோ கரெக்ட்’ எழுத்துப்பிழைகளைத் தானாகச் சரிசெய்யும் வசதியாக அமைகிறது என்றால், ‘ஆட்டோ கம்ப்ளீட்’, எழுதும்போது அடுத்து வரக்கூடிய சொற்களை யூகித்துப் பரிந்துரைக்கும் கணிப்பு வசதியாக அமைகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in