

கனடாவைச் சேர்ந்த ஆண்டினி அப்போது சிறுமி. பிலிப்பைன்ஸில் இருந்த அவரின் தோழி வறுமையால் வீட்டின் மின்கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை; இதனால் இரவில் மின்சாரம் இல்லாமல் படிக்க முடியவில்லை என தோழி கவலைப்பட்டார்.
உடனே ஆண்டினி மனதில், ‘வழக்கமான மின்சாரம் இல்லாமலே வெளிச்சத்தை உருவாக்கலாமே’ எனத் தோன்றியது. அந்த வகையில் தனது தோழியின் வருத்தத்தைப் போக்கவே கண்டுபிடிப்பாளரானவர், ஆன் மக்கோசின்ஸ்கி என்கிற ஆண்டினி.மற்ற குழந்தைகள் டிவி கார்ட்டூன், வீடியோ கேம்ஸ் என நேரத்தை வீணடித்தபோது, ‘என் வழி இசை வழி’ என்பதாக இசை கேட்பது; பியானோ, வயலின் வாசிப்பது என்றுதான் ஆண்டினி ஓபரா இருந்தார்.
இன்னொருபுறம் ஆண்டினிக்கு பெற்றோர் நிறையப் பொம்மைகள் வாங்கித் தரவில்லை. அவருக்குக் கிடைத்த முதல் பொம்மையே ஒரு பெட்டி நிறையக் கணினி டிரான்சிஸ்டர்கள்தான். இதனால், தனக்கான பொம்மைகளை உருவாக்க தானே ஆரம்பித்தார்.
முதல் கண்டுபிடிப்பு
அக்கம்பக்கத்தில் கிடந்த குப்பை, ஹாட் குளூ கன் எனக் கிடைத்ததை வைத்து எதையாவது புதிதாக உருவாக்க முயன்றார். பிறகு 15 வயதில்தான் பிலிப்பைன்ஸ் தோழியின் மின் சிக்கலுக்கு, ஆண்டினி ‘ஹாலோ ஃபிளாஷ்லைட்’டைக் கண்டுபிடிக்க நினைத்தார்.