ஏஐ உருவாக்கும் பெருங்குப்பைகள்! | ஏஐயின் இன்னொரு முகம்

ஏஐ உருவாக்கும் பெருங்குப்பைகள்! | ஏஐயின் இன்னொரு முகம்
Updated on
2 min read

மனிதர்களைவிட இயந்திரங்கள் வேகமாகச் செயல்படலாம். துல்லியமான பலனைத் தரலாம். இன்னும் பல அனுகூலங்களைக் கொண்டிருக்கலாம். என்றாலும், இயந்திரத்தன்மை என்பது எப்போதுமே தட்டையான, உயிரற்ற தன்மையாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது.

இப்போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) யுகத்தில், இந்த இயந்திரத்தன்மை தன்னைப் புதிய ஆற்றலோடு புதுப்பித்துக் கொண்டுள்ளதோடு மனிதக் குலத்துக்கான புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அது நம்மைக் கண்ணுக்குத் தெரியாத பெருங்குப்பையில் திளைக்கவைத்து, அதே குப்பையில் மூழ்கடிக்கவும் செய்கிறது.

இந்த டிஜிட்டல் பெருங்கடலில் தத்தளிப்பதை நாம் உணர வேண்டும் என்பதோடு, அதிலிருந்து நம்மை நாமே மீட்டெடுப்பதும் அவசியமாகிறது. ‘ஜென் ஏஐ’ எனும் ஆக்கத்திறன் நுட்பம் உருவாக்கி யிருக்கும் புதிய உலகுக்கு வாருங்கள். ஏஐ பெருங்குப்பை (AI slop) என இது அழைக்கப்படுகிறது.

ஏற்கெனவே அறிமுகமான மின்னஞ்சல் குப்பையின் அடுத்த வடிவம்தான் என்றாலும், ஏஐ பெருங்குப்பை என்பது கட்டுப்படுத்த முடியாததாகப் பெருகிக்கொண்டிருக்கிறது.

கிரியேட்டர் பொருளாதாரத்தைக் கொண்டாடும் காலத்தில், இப்படி ஏஐ பெருங்குப்பையை எதிர்கொள்வது முரண். என்றாலும், நம் காலத்து டிஜிட்டல் நிஜம் இது. இணையப் பரப்பில் உங்களைச் சுற்றி இத்தகைய டிஜிட்டல் குப்பை குவிந்திருப்பதை எளிதாக உணரலாம். எடுத்துக்காட்டு தேவையென்றால், உங்கள் சமூக ஊடகப் பக்கத்தைத் திறந்து பாருங்கள்.

பக்க விளைவு

ஓர் ஒளிப்படமோ காணொளியோ அல்லது மீமோ, இயல்பை மீறிய செயற்கைத்தன்மையோடு, ஆனால் கவர்ந்திழுக்கும் தன்மையோடு அமைந்திருப்பதை உணரலாம்.

முதல் பார்வையில், அட! நன்றாக இருக்கிறதே என்கிற எண்ணத்தையும் அது ஏற்படுத்தலாம். அதே உந்துதலில் லைக் செய்யவோ, பகிர்ந்துகொள்ளவோ செய்தீர்கள் என்றால், அந்தப் பெருங்குப்பை வைரலாகி பரவும் ஆற்றலை அதிகரித்துக்கொள்ளும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in