தோனியின் ஏழு அவதாரங்கள்!

தோனியின் ஏழு அவதாரங்கள்!
Updated on
1 min read

மகேந்திர சிங் தோனி இந்திய அணியை வழிநடத்திச் சென்ற தலைச்சிறந்த கேப்டன்களில் ஒருவர். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று ஐ.பி.எல் தொடரில் மட்டும் விளையாடி வரும் அவர், ஒரு சிறந்த தொழில் முனைவோராகவும் உருவெடுத்திருக்கிறார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப்பெறும் வீரர்கள் பொதுவாக வர்ணனையாளராகவோ, நிகழ்ச்சித் தொகுப்பாளராகவோ, கிரிக்கெட் சார்ந்தோ பணியைத் தொடர்வார்கள். ஆனால், தோனிக்குள் இருக்கும் நிர்வாகத் திறன் அவரை ஒரு ‘பிஸினஸ்மேன்’ அவதாரம் எடுக்க வைத்திருக்கிறது. கிரிக்கெட்டைத் தாண்டி தோனியின் இதர தொழில்கள் ஒரு பார்வை.

விளையாட்டு அணிகள்: சென்னையின் எஃப்.சி கால்பந்து அணி, ராஞ்சி ரேஸ் ஹாக்கி அணியின் இணை உரிமையாளராகவும், சர்வதேச ரேஸிங் தளத்தில் பங்கேற்கும் ‘மஹி ரேஸிங் டீம் இந்தியா' குழுவையும் நிர்வகித்து வருகிறார்

இயற்கை விவசாயம்: தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் அமைந்துள்ள 40 ஏக்கர் பண்ணை வீட்டில் 10 ஏக்கர் நிலப் பரப்பில் காய்கறி, பழங்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.

ஹோட்டல்: ராஞ்சியில் ‘மஹி ரெசிடென்சி' ஹோட்டலை நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை.

ஃபிட்னெஸ் மையங்கள்: விளையாட்டு வீரர்களுக்கான ஆடை, ஷூ விற்பனை செய்யும் ‘செவன்' பிராண்டின் விளம்பரத் தூதராகவும், பங்குதாரராகவும் இருக்கும் தோனி, நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்ட 'ஸ்போர்ட்ஸ் ஃபிட்' ஜிம் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

கார்ஸ் 24: கார், பைக் பிரியரான தோனி, ‘கார்ஸ் 24’ என்கிற நிறுவனத்தில் முதலீடு செய்து அந்நிறுவனத்தின் விளம்பரத் தூதராகவும் இருக்கிறார்.

திரைப்படத்துறை: ‘தோனி எண்டர்டெயின் மெண்ட்’ என்ற பெயரில் இயங்கி வரும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே ‘தி ரோர் ஆஃப் தி லயன்’ என்கிற ஆவணப்படத்தை தயாரித்திருந்தது. இனி தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நேரடித் திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

த்ரோனி: ட்ரோன் தயாரிக்கும் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் தோனி முதலீடு செய்திருக்கிறார். விவசாய பூச்சிக்கொல்லி தெளிக்க உதவும் ‘த்ரோனி’ என்கிற ட்ரோன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

பெரும்பாலும் தன்னை ஒப்பந்தம் செய்யும் நிறுவனங்களின் விளம்பரத் தூதராகவும், அந்தந்த நிறுவனங்களில் கனிசமாகப் பணத்தை முதலீடும் செய்து வருகிறார் தோனி. இவருடைய தற்போதைய சொத்து மதிப்பு ரூ. 840 கோடி என தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோனி கிரிக்கெட்டில் மட்டுமல்ல பிசினெஸிலும் கில்லிதான்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in