டெக் ஷார்ட்கட்ஸ் - ஒளிப்படங்களை அன்லிமிடடாக சேமிப்பது எப்படி?

டெக் ஷார்ட்கட்ஸ் - ஒளிப்படங்களை அன்லிமிடடாக சேமிப்பது எப்படி?

Published on

நினைவுகளை நிரந்தரமாக நிலைநிறுத்தும் ஒளிப்படங்களைச் சேமித்து வைக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. முன்பு போல் கேமரா மற்றவர் கையில் இல்லாமல், அது நம் கையில் மொபைல் வடிவில் இருக்கும் ஒன்றாக மாறிவிட்டது. ஒளிப்படம் எடுப்பதை இது எளிமையாக்கி இருப்பதால், எண்ணிக்கையில் அடங்காத ஒளிப்படங்கள் மொபைலில் நிரம்பி வழிகின்றன. கூகுள் போட்டோஸ் அளிக்கும் சேமிப்பு அளவு கூட நமக்கு போதுமானதாக இல்லை. இந்தச் சேமிப்பு பிரச்சினைக்கு டெலிகிராம் செயலி அளிக்கும் எளிய வழி:

என்ன செய்ய வேண்டும்?

  • முதலில் டெலகிராம் செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்.
  • பின் இடது கீழ் புறம் உள்ள பென்சில் ஐகானை கிளிக் செய்யுங்கள்.
  • அதில் நியூ சேனலைச் கிளிக் செய்யுங்கள்.
  • பின் உங்களுக்குப் பிடித்த பெயரை டைப்செய்யுங்கள்.
  • பிறகு இடது மேல் புறம் உள்ள டிக் ஐகானை கிளிக் செய்யுங்கள்.
  • சேனல் டைப்பில் பிரைவட்டை என தேர்ந்தெடுத்து, மீண்டும் இடது மேல் புறம் உள்ள டிக் ஐகானை கிளிக் செய்து பேக் வந்து விடுங்கள்.
  • நீங்கள் உருவாக்கிய சேனல் இப்பொழுது உங்களுக்கு தெயும். அதை கிளிக் செய்து உள்ளே இடது கீழ் புறம் உள்ள கிளிப் ஐகானை கிளிக் செய்து உங்கள் மனம் கவர்ந்த ஒளிப்படங்களை அன்லிமிடடாக பதிவேற்றம் செய்து மகிழ்ச்சியான நினைவுகளைச் சேமித்து வையுங்கள்.

- சுரேஷ் ஜி

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in