

1. டைனோசரால் சம்மணம் போட்டு உட்கார முடியாது. ஏன்?
2. இரண்டு குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறக்கின்றன. ஆனால் அவர்கள் இருவருக்கும் ஒரே பிறந்த நாள் கிடையாது. எப்படி?
3. ஒரு பெண்ணுக்கு ஒரே நேரத்தில், ஒரே நாளில், ஒரே வருடத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. ஆனால் அந்தக் குழந்தைகள் இரட்டையர்கள் அல்ல. ஏன்?
4. நீங்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்கலாம் வாருங்கள். உயரமான ஒரு வாழை மரம் இருக்கிறது. யார் அந்த மரத்திலிருந்து முதல் வாழைப்பழம் பறிக்கப் போகிறோம் என ஒரு சிங்கம், ஒரு குரங்கு, ஒரு ஒட்டகச்சிவிங்கி, ஒரு அணில் தங்களுக்குள் போட்டி வைத்துக் கொள்கின்றன. இவர்களில் யார் வெல்லுவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
5. அவர் பறவைகளை ரசித்துப் பார்ப்பார். ஒரு நாள் ஓர் அபூர்வமான பறவையைப் பார்த்த சில நிமிடங்களில் இறந்துவிட்டார். என்ன நடந்தது?