டாப் 10 பாடலும் விமர்சனமும்

டாப் 10 பாடலும் விமர்சனமும்
Updated on
2 min read

1. ‘உன்ன இப்ப பார்க்கணும்’ – கயல்

l இசை – டி.இமான் l பாடகர் - ஹரிசரண், வந்தனா நிவாசன், l பாடலாசிரியர் - யுகபாரதி.

இமான், பிரபு சாலமன், யுகபாரதி கூட்டணி மீண்டும் மாயாஜாலம் செய்திருக்கிறது. இந்த மயக்கும் பாடலை உருவாக்கியதில் யுகபாரதியின் பங்கு முக்கியமானது. ஹிட்டுக்கு மேல் ஹிட் அடிக்கிறார் ஹரிசரண். இந்த வருடத்தின் பெரும்பாலான மெலடி ஹிட்ஸ் அவருடையவை. யார் இந்த வந்தனா நிவாசன்? குரல் மின்சாரம் போல பாய்கிறது.

2. ‘உன்னாலே கண்கள் தள்ளாடி’ – டார்லிங்

l இசை - ஜி.வி.பிரகாஷ் l பாடகர்- சங்கர் மஹாதேவன், ஷ்ரேயா கோஷல் l பாடலாசிரியர் – நா.முத்துக்குமார்.

தமிழ்த் திரையிசையைத் தரவரிசைப்படுத்தும் பல இணையதளங்கள் டார்லிங் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘பாட் டாங்கி ஸ்மால் வால்’ என்னும் குத்துப் பாடலைத்தான் ரேட்டிங்கில் போட்டிருக்கிறார்கள். ஆனால் ‘உன்னாலே கண்கள் தள்ளாடி’ எனும் இந்தப் பாடல் பேய்த்தனமான ரொமாண்டிக் பாடல். சங்கர் மஹாதேவன், ஷ்ரேயா கோஷல் குரல் இணைந்தால் பாட்டு எப்படி இருக்கும் எனச் சொல்ல வேண்டுமா?

3. ‘ஏன் டீ இப்படி எனக்கு’ – எனக்குள் ஒருவன்

l இசை – சந்தோஷ் நாராயணன் l பாடகர் - சந்தோஷ் நாராயணன் l பாடலாசிரியர் – கணேஷ் குமார் கிருஷ்.

பாடல் ஆரம்பமானவுடனேயே கானா பாலாவின் குரல் போலத் தோன்றியது. ஆனால் அவர் குரலைவிடவும் படுபயங்கரமாக இருக்கிறதே எனப் பார்த்தால் சந்தோஷ் நாராயணன்தான் பாடியிருக்கிறார். கானா பாட்டாக இருந்தாலும் பின்னணியில் இசைக்கும் கிட்டார், பேக்கிங் வோகல்ஸ் எல்லாம் சேர்ந்து பாட்டை எங்கோ கொண்டு போய்விடுகிறது.

4. ‘வருவாயோ’ – ரா

l இசை – ராய் ஆரியன் l பாடகர் – கார்த்திக் l பாடலாசிரியர் – லாரன்ஸ் ராமு.

நீங்கள் காதல் வசப்பட்டவராக இருந்தால் இந்தப் பாடல் உங்களை அப்படியே வாரி அணைத்துக்கொள்ளும். கார்த்திக்கின் குரலும் தேனாய் இனிக்கிறது.

5. ‘இசை வீசி’ – இசை

l இசை – எஸ்.ஜே.சூர்யா l பாடகர் – சின்மயி l பாடலாசிரியர் – மதன் கார்க்கி.

புயல் போல் சர்ச்சை ஏற்படுத்தும் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தென்றல் போல் மென்மையான இசை அமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். படத்திற்கே ‘இசை’ எனப் பெயரிட்டிருப்பதால் எதிர்ப்பார்ப்பைத் தூண்டுகிறது.

6. ‘காதல் கசாட்டா’ - கப்பல்

l இசை – நடராஜன் சங்கரன் l பாடகர்- சத்ய பிரகாஷ், சைந்தவி, யுகி ப்ரவீன் l பாடலாசிரியர் – மதன் கார்க்கி.

சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான சத்ய பிரகாஷ் நன்றாகவே பாடியிருக்கிறார். சைந்தவியுடைய ஷ்ரில் வாய்சும் சத்யாவின் சன்னமான குரலும் சரியான காம்பினேஷன். புதிய வார்த்தைகளைத் தமிழ்ப் பாடல்களில் இணைத்து மொழிப் பொறியாளர் மதன் கார்க்கி ஜாலம் செய்திருக்கிறார். இந்தப் பாடலும் கசாட்டா, பாசந்தி எனச் சில பல சுவையான வார்த்தைகளைக் கொண்டிருக்கிறது.

7. ‘இது காக்கி சட்ட’ – காக்கிச் சட்டை

l இசை – அனிருத் l பாடகர் – விஷால் டாத்லானி l பாடலாசிரியர் – நா.முத்துக்குமார்.

இந்த பாடலைக் கேட்கத் தொடங்கிய உடனே அனிருத் இசை என்று தெரிந்து விடுகிறது. இதற்கு அர்த்தம் தனக்கென்று தனி பாணியை அனிருத் உருவாகிக்கொண்டுவிட்டாரா அல்லது திரும்பத் திரும்ப ஒரே மாதிரி இசையைப் போட்டுத் தள்ளுகிறாரா என்பதை நீங்களே கேட்டு முடிவு பண்ணிக்குங்க.

8.‘டங்கா மாரி ஊதாரி’ –அனேகன்

l இசை – ஹாரிஸ் ஜெயராஜ் l பாடலாசிரியர் - ரோகேஷ் l பாடகர் - தனுஷ், மரண கானா விஜி, நவீன் மாதவ்

இது அப்பட்டமான சென்னை வட்டார வழக்கு மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே தாரை, தப்பட்டை கிழி கிழினு கிழியிற மாதிரி அசத்தலாகப் பாடியிருக்கிறார் மரண கானா விஜி.

9. ‘என் மன்னவா’ – லிங்கா

l இசை- ஏ.ஆர்.ரஹ்மான் l பாடகர் – நிவாஸ், அதிதி பால் l பாடலாசிரியர்- வைரமுத்து.

ரஜினிகாந்த், வைரமுத்து, ரஹ்மான் இவர்களின் வெற்றிக் கூட்டணியை நம்பி பாட்டைக் கேட்டால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

10. ‘யாருமில்லா தனி அரங்கில்’ – காவியத் தலைவன்

l இசை – ஏ.ஆர்.ரஹ்மான்l பாடலாசிரியர் – பா.விஜய் l பாடகர் – ஸ்வேதா மோகன்

ரஹ்மான் என்றாலே எலக்ட்ரானிக் இசைதான் என நினைப்பவர்களுக்கு ஹார்மோனியம், தவில், வீணை எனப் பாரம்பரியமான இசைக் கருவிகளையும் அவர் அற்புதமாகப் பயன்படுத்துவார் எனக்காட்டும் பாடல். ஸ்வேதாவின் தமிழ் உச்சரிப்பைத் தனியாகப் பாராட்டலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in