

1.பக்கத்திலிருக்கும் படம் எதைக் குறிக்கிறது?
2.ஒரு ராஜா கி.மு. 36-ல் பிறந்தார். 100 வருடங்கள் வாழ்ந்தார். அப்படியானால் கி.பி. 38-ல் அவர் எத்தனையாவது பிறந்த நாளைக் கொண்டாடியிருப்பார்?
3. 90 கிலோ எடை உள்ள ஒருவர், ஒரு படகில் தலா 5 கிலோ எடை உள்ள 3 தங்கப் பந்துகளை எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் அந்தப் படகு மொத்தத்தில் 100 கிலோ மட்டுமே தாங்கும். ஆனால் தங்கப் பந்துகளைப் படகில் திறமையாக அவர் எடுத்துச் சென்றார். எப்படி?
4.குறிப்பிட்ட ஓரிடத்திலிருந்து ஜான் தெற்குப் பார்த்து 1 கி.மீ. நடக்கிறான். அடுத்து மேற்கு நோக்கி 1 கி.மீ. நடக்கிறான். அப்போது ஒரு கரடி எதிரே வருகிறது. அடுத்து வடக்கு திசை நோக்கி 1 கி.மீ. நடந்து தொடக்கப் புள்ளிக்கே திரும்பிவிடுகிறான். ஜான் பார்த்த கரடியின் நிறம் என்ன?
5.சூர்யா ஹோட்டலில் காப்பி ஆர்டர் பண்ணினான். காப்பியில் ஈ விழுந்து கிடப்பது கண்டு அதைத் திருப்பித் தந்துவிட்டு வேறு காப்பிக்கு ஆர்டர் பண்ணுகிறான். பேரர் வேறு காப்பி கொண்டுவந்து தர, சிறிது நேரம் கழித்து “ஈ விழுந்த அதே காபிதான் இது” என சூர்யா சண்டை போடுகிறான். ஏன்?