

1.ஒரு பெரிய ஒட்டகச்சிவிங்கியை உங்கள் வீட்டு பிரிட்ஜில் எப்படி வைப்பீர்கள்?
2.ஒரு பெரிய யானையை உங்க வீட்டு பிரிட்ஜில் எப்படி வைப்பீர்கள்?
3.காட்டு ராஜா சிங்கம் ஒரு நாள் எல்லா விலங்குகளையும் அழைத்து மாநாடு ஒன்றை நடத்தியது. ஆனால் ஒரு விலங்கு மட்டும் மாநாட்டில் பங்குபெறவில்லை. எந்த விலங்கு பங்குபெறவில்லை?
4.ஓடும் நதியை நீங்கள் நீந்திக் கடக்க வேண்டும். ஆனால் அது முதலைகள் நிறைந்த நதி. எப்படிச் சமாளிப்பீர்கள்?
பதில்கள்:
1. பிரிட்ஜைத் திறந்து ஒட்டகச்சிவிங்கியை உள்ளே வைக்க வேண்டும்
2. முதலில் உள்ளிருக்கும் ஒட்டகச் சிவிங்கியை வெளியே எடுத்துவிட்டு பின்னர் யானையை உள்ளே வைக்க வேண்டும்
3. யானை தான் பிரிட்ஜுக்குள் இருக்கிறதே, பின்பு எப்படி மாநாட்டுக்கு வர முடியும்?
4. அட! எல்லா விலங்குகளும் மாநாட்டுக்கு போய்விட்டனவே, பின்பு முதலை எப்படி நதியில் இருக்கும்?