

எஃப்.டி.எஃப்.எஸ். என்கிற முதல் நாள் முதல் காட்சிப் பார்ப்பதில் தொடங்கி, நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றுவது, அரட்டையடிப்பது, திறன்பேசியை எந்நேரமும் நோண்டிக்கொண்டே இருப்பது, கல்லூரி செமஸ்டர் தேர்வு வந்தாலும் அலட்டிக்கொள்ளாமல் இருப்பது போன்றவை இன்றைய ‘ஜென் இசட்’களின் அன்றாட வாழ்க்கையாகிவிட்டது.
இதனால், வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தாலே பெற்றோரின் ‘அட்வைஸ்’ மழைக்கும் பஞ்சமிருக்காது. அட்வைஸ் என்றாலே ‘பூமர்’கள் என்று முத்திரைக் குத்தி அரண்டு ஓடும், ‘ஜென் இசட்’கள் வீட்டில் நல்ல பெயர் வாங்கவே முடியாதா? முடியும், அதற்குதான் இந்தடிப்ஸ்.