

‘கோல்டன் ஸ்பாரோ’ (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), ‘கிஸிக்’ (புஷ்பா), ‘மோனிகா’ (கூலி) போன்ற ஹிட் பாடல்களைப் பாடி தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் அடித்துள்ளார், பாடகி சுப்லாஷினி. இன்று திரையரங்குகளில் வெளியாகும் ‘தலைவன் தலைவி’ படத்தில் இடம்பெற்றுள்ள வைரல் பாடலான ‘பொட்டல முட்டாயே’ பாடியதும் இவர்தான். பின்னணி பாடுவது, இசை நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பது என பிஸியாக இருந்தவரோடு ஓர் உரையாடல்.
சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா? - அதிகாலை 3 அல்லது 4 மணிவரை விழித்திருந்து ‘லேட்’டாகத் தூங்கி, ‘லேட்’டாக எழுந்திருப்பதுதான் வழக்கம். இந்தப் பழக்கத்தை மாற்றத்தான் தலைகீழா நிக்கிறேன், பச்!