

பதினெட்டாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஐபிஎல்லில் இளம் வீரர்கள் கவனம் ஈர்க்கத் தவறுவதில்லை. அந்த வகையில் 2025இல் கவனம் ஈர்த்த இளம் கிரிக்கெட் வீரர்கள் சிலர்:
வைபவ் சூரியவன்ஷி (ராஜஸ்தான் ராயல்ஸ்) - 14 வயதேயான வைபவ் சூரியவன்ஷியை ரூ.1.1 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தபோது ராஜஸ்தான் அணி அதிக விலையைக் கொடுத்துவிட்டதாக நெட்டிசன்கள் ‘ட்ரோல்’ செய்தனர். ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 35 பந்துகளில் சதம் விளாசி ‘ட்ரோல்’களுக்குத் தனது பேட்டின் மூலம் பதிலடி தந்தார் வைபவ். முதல் சதத்தையே, ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக விளாசிய இந்திய வீரர் என்கிற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகி தனி முத்திரை பதித்துள்ளார்.