

பாடலாசிரியர், பாடகர், நடிகர் எனப் பன்முக திறமை கொண்டவர் நிக்சன். ‘பிக்பாஸ் சீசன் 7’ நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழைச் சரியாகப் பயன்படுத்தி அடுத்த கட்டத்துக்கு முன்னேறிய நிக்சன், ‘குட் பேட் அக்லி’ படத்தில் ‘ரணகளம்’ பாடல் மூலம் கூடுதல் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். அவரை ஒரு மாலைப் பொழுதில் சந்தித்து நிகழ்த்திய உரையாடல்.
சூரிய உதயம் பார்க்கும் பழக்கம் உண்டா? - காலையில் சீக்கிரமாகவே எழுந்திருக்கும் ஆள் நான். காலை சூரிய உதயமும் பறவைகள் ஒலியும் எனக்குப் பிடித்தமானவை.