நிகழ்ச்சித் தொகுப்பாளர், பேச்சாளர் என ஊடகங்களில் வலம்வரத் தொடங்கி, ‘பிக் பாஸ் சீசன் 8’இல் பங்கேற்று வெற்றிபெற்றவர் முத்துக்குமரன். கலகலவெனப் பேசிய அவருடன் ஒரு காபி கோப்பை உரையாடல்:சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா?.தூங்கி எழ என ஒரு குறிப்பிட்ட நேரத்தைப் பின்பற்றுவதில்லை. என்றாலும், தொடர் பயணமும் வேலையும் இருப்பதால் காலையில் எழுந்துதானே ஆக வேண்டும், வேற வழி?‘ஒர்க் அவுட்’டா, ‘டயட்’டா?.நேரம் கிடைக்கும்போது ஓடுவேன், உடற்பயிற்சி செய்வேன். துரித உணவு, ‘ஜங்க் ஃபுட்’ சாப்பிட மாட்டேன். ஆனால், யார் வீட்டில் சாப்பிடக் கூப்பிட்டாலும் ‘நோ’ சொல்லிவிட்டு அம்மா செய்யும் வீட்டுச் சாப்பாட்டுக்காக ஓடிப்போயிடுவேன்!தனித்துவமான பழக்கம்?.எனக்கு எவ்வளவு கோபம் வந்தாலும் ‘கைப்புள்ள தூங்குடா’ என்பதுபோல படுத்த பத்தாவது நொடியே தூங்கிடுவேன்!‘கம்-பேக்’ தருணம்?.‘தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகக் கிடைத்த வாய்ப்பு பெரும் ஊக்கத்தைத் தந்தது. அதுவரை மொழி சார்ந்து இயங்குவதற்கான வழித்தடமோ அடையாளமோ இல்லாமல் இருந்தது.இந்த வேலை இல்லையெனில்?.ராணுவம் அல்லது காவல்துறை பணியில் சேர்ந்திருப்பேன். ஆனால், தற்போது ஊடகத் துறையில் மட்டும்தான் என் முழு கவனமும்.எதிர்காலத் திட்டம்?.அம்மா, அப்பாவைக் கூட்டிக்கொண்டு மலேசியா உள்ளிட்ட உலக நாடுகளைச் சுற்றி வர வேண்டும்..புத்தக வாசிப்பா, திரை அனுபவமா?திரைப்படங்கள் அதிகமாகப் பார்ப்பதற்கான சூழல் இதுவரை அமையவில்லை என்பதால், பெரும்பாலும் புத்தகங்கள் பயனுள்ளதாக இருந்திருக்கின்றன. ஆனால், ஒரு படைப்பு புத்தகமாக, ஆவணப்படமாக, ‘பாட்காஸ்ட்’ ஆக இருக்கும் பட்சத்தில் கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்வேன்..பொழுதுபோக்கு?புத்தகம் வாசிப்பது, உடற்பயிற்சி செய்வது. ஆனால், நண்பர்களைச் சந்திக்கச் செல்வதுதான் பிடித்த பொழுதுபோக்கு..பிடித்த சமூக வலைதளம் எது, ஏன்?எனக்குப் பெரிய அடையாளத்தைப் பெற்றுத்தந்த இன்ஸ்டகிராம்..மனதில் பதிந்த வரி?‘முயற்சி திருவினை ஆக்கும்’; ‘தெய்வத்தான் ஆகா தெனினும்...’ குறள்..மறக்க முடியாத நபர்?ஒன்றல்ல நிறையப் பேர். அந்தந்தக் காலக்கட்டத்தில் எனக்கு உதவி செய்த அனைவருமே மறக்க முடியாதவர்கள்தான்..உறங்கவிடாத ஒன்று?‘தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு’ நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பை நான் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்கிற கோபம் என்மீதே எனக்கு இருக்கிறது. சிறப்பாகச் செயல்படாமல் போன அந்த நாள்கள் என்னை தூங்கவிடாமல் செய்திருக்கின்றன. எப்போதும் ஒரு விஷயத்தைச் சரியாகச் செய்யவில்லை, தவறு செய்திருக்கிறேன் என்றால் அன்றைக்கு எனக்குத் தூக்கம் வராது!.திரும்பத் திரும்பப் போக விரும்பும் இடம்?பெரும்பாலும் வெளியூர்களுக்குப் பயணித்துக் கொண்டே இருப்பதால், எப்போது வீடு திரும்புவோம் என்கிற ஆவல் இருக்கும். ஆனால், அடிக்கடி நான் செல்ல விரும்பும் ஓர் இடம் ‘மேடை’தான்.