செல்போன் இல்லாம இருக்கணும்! | காபி வித் நிவேதிதா

செல்போன் இல்லாம இருக்கணும்! | காபி வித் நிவேதிதா
Updated on
1 min read

‘நக்கலைட்ஸ்’ யூடியூப் அலைவரிசையில் வெளியாகும் காணொளிகளில் சுவாரசியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பிரபலமானவர், கோவையைச் சேர்ந்த நிவேதிதா ராஜப்பன். யூடியூப்பிலிருந்து பெரிய திரைக்கு புரொமோட்டாகி ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘ஸ்டார்’ போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார். கொங்குத் தமிழில் பேசி கோவைக்கே கூட்டிச்சென்ற நிவேதிதாவுடன் காபி கோப்பையுடன் நடந்த உரையாடல்.

சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா? - அண்மைக் காலமாகக் காலை 6 மணிக்கு படப்பிடிப்பைத் தொடங்கும் ஒரு ‘புராஜெக்ட்’டில் நடிப்பதால், அதிகாலை 3 மணிக்கே ‘கெட்-செட்-கோ’ என வாழ்க்கை ஓடுது.

‘ஒர்க் அவுட்’டா, ‘டயட்’டா? - நாள்தோறும் அரை மணி நேர ‘ஒர்க்-அவுட்’, கலோரி குறைவான சாப்பாட்டைச் சாப்பிட வேண்டும் என்பதுதான் எய்ம்.

தனித்துவமான பழக்கம்? - கொஞ்சம் ‘ஓசிடி’ இருப்பதால், பொருளெல்லாம் அந்தந்த இடத்தில் இல்லையென்றால் ‘டென்ஷன் பார்ட்டி’ ஆயிடுவேன்!

மறக்க முடியாத தருணம்? - சிறு வயது முதலே நடிக்க வேண்டும் என்கிற கனவு ஒரு நாள் நனவானபோது!

இந்த வேலை இல்லையெனில்? - விவசாயம் செய்துகொண்டே இன்னொரு பக்கம் ‘பிசினஸ் வுமன்’ ஆகியிருப்பேன்.

‘பக்கெட்-லிஸ்ட்’ ஷேரிங்ஸ்? - இத்தாலிக்குப் போக வேண்டும். ஒரு வாரமாவது கையில் ‘போன்’ இல்லாமல் இருக்க வேண்டும்!

புத்தக வாசிப்பா, திரை அனுபவமா? - படங்கள் அதிகமா பார்க்கும் பழக்கம் உண்டு. என்றாலும் வாசிப்பில் நாட்டமுள்ள ’புத்தகப் புழு’ நான்!

பொழுதுபோக்கு? - குழந்தைகளுக்கான ‘கலரிங்’ புத்தகத்தில் கலர் அடிப்பது, ஹிஹி!

பிடித்த சமூக வலைதளம்? - சோஷியல் மீடியாவில் ‘அப்போ இப்போ’ன்னுதான் தலையைக் காட்டுவேன். யூடியூப்தான் நம்ம ‘ஃபேவரைட்’. அதில் கற்றுக்கொள்ள அவ்ளோ விஷயங்கள் இருக்கின்றன.

மறக்கவே முடியாத நபர்? - என்றைக்கும் அம்மாதான்.

மனதில் பதிந்த வாக்கியம்? - ‘முயற்சி செய்தால் முடியாத காரியம் எதுவுமில்லை’, உண்மைதானே?

மறக்க முடியாத தேதி? - ஒன்றல்ல இரண்டு! 2022, பிப்ரவரி 10, 11. வாழ்க்கையில் சில விஷயங்களைப் புரிந்துகொண்ட முக்கியமான நாள்கள் இவை!

உறங்கவிடாத ஒன்று? - புதிதாக வாங்கிய ஒரு பொருளையோ துணியையோ அடுத்த நாள் பயன்படுத்திப் பார்க்கும்வரை தூக்கம் வராது! நான் நடித்த திரைப்படம் வெளியாவதற்கு முந்தைய நாளும் ‘நோ’ தூக்கம்.

திரும்பத்திரும்பப் போக விரும்பும் இடம்? - நொய்யல் ஆற்றங்கரையோரம் இருக்கும் எங்கள் அழகான தோட்டம்.

‘நிவேதிதா ராஜப்பன்’ - ஒரே வார்த்தையில்? - நானா சொல்லல, ஆனால் நண்பர்கள் வைத்த பட்டப்பெயர் ‘மிஸ். பர்ஃபெக்ட்’.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in