

‘ஸ்டாண்ட்-அப்’ நகைச்சுவைக் கலைஞர்களில் திருநெல்வேலி பாஷையில் பேசிக் கலகலப்பூட்டுபவர் ராம்குமார். கிடைத்த கேப்பில் ஒரு காபி குடித்துக்கொண்டே அவருடன் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாகப் பேசியதில் இருந்து:
சன் ரைஸ் பார்ப்பீர்களா? - தினமும் காலை 7.45க்கு எழுந் திருப்பதுதான் நம்ம வழக்கமே.
‘வொர்க்-அவுட்’டா, டயட்டா? - எப்போதும் ‘வொர்க்-அவுட்’தான் ‘வொர்க்-அவுட்’ ஆகிறது
தனித்துவமான பழக்கம்? - நிகழ்ச்சிகளுக்கான ‘ஐடியா’வெல்லாம் நடக்கும்போதுதான் வந்து கொட்டுது. அதுதான் நம்ம வாழ்க்கைங்கிறப்ப, நடந்துதானே ஆகணும். என்ன செய்ய?!
‘கம்-பேக்’ தருணம்? - அவ்வப்போது ‘ஃபிட்னஸ்’ சார்ந்து அடுத்த கட்டத்தை எட்டும்போதும், சிறப்பாகச் செயல்படும் ஒவ்வொரு தருணமும் நமக்கு ‘கம்-பேக்’ தருணம்தான்.
இந்த வேலை இல்லையெனில்? - தாய்க் கழகமான ஐ.டி. வேலை யிலேயே தொடர்ந்திருப்பேன்.
எதிர்கால கனவு? - மேற்கத்திய நாடுகளில் பிரபலமான ‘கிரவுட்-வொர்க்’ எனப்படும் ‘ஸ்கிரிப்ட்’ இல்லாமல் ‘ஸ்பாட்’டில் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்துவது.
புத்தக வாசிப்பா, திரை அனுபவமா? - புத்தகங்களே என் ‘சாய்ஸ்’.
பொழுதுபோக்கு? - மாலை நேரத்தில் மகளுடன் பாட்மிண்டன் விளையாடுவது.
பிடித்த சமூக வலைதளம்?- தற்போதைக்கு இன்ஸ்டகிராமும் லிங்க்டு இன் தளமும். ‘எக்ஸ்’ தளத்தில் ‘ஃபேக்’ ஐடி அதிகம். அந்தப் பக்கமெல்லாம் அதிகம் தலையே வைக்கிறதில்லை.
உறங்கவிடாதது? - ஏதாவது ஒரு நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்காமல் போகும்போது, உறக்கமும் போயிந்தி!
மறக்கவே முடியாத நபர்? - பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் 150/150 மதிப்பெண்கள் எடுக்கவில்லை என்றால் ‘டியூஷன்’ கட்டணம் வாங்க மாட்டேன் என அடித்துச்சொன்ன என் வேதியியல் ஆசிரியர் மங்கை மணாளன்.
மனதில் பதிந்த வாசகம்? - எல்லாமே கடந்து போகும்!
மறக்க முடியாத தேதி? - ஆகஸ்ட் 31, 2022. இந்த நாள் ஐ.டி. வேலைக்கு முற்றுப்புள்ளி வைத்த நாள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை கலைஞராக உருவெடுத்த நாள்.
திரும்பத் திரும்பப் போக விரும்பும் இடம்? - எங்க ஊரு திருநவேலி.காபி வித் ராம்குமார்வொர்க்-அவுட்ஃபிட்னஸ்ஸ்கிரிப்ட்