

படம் உதவி: ஞானம்
பர்மாவிலிருந்து சென்னை வந்து இறங்கும் குணசேகரன் எல்லாப் பொருளையும் இழந்துவிடுகிறான். தங்கை கல்யாணியைக் கைக்குழந்தையோடு அபலையாக, கைம்பெண்ணாகப் பார்க்கிறான். அவளுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதற்காகப் பைத்தியம்போல் நடிக்கிறான்.
‘பராசக்தி’ (1952) படத்தின் இந்தக் கதையோட்டத்தில் சிவாஜி கணேசன் ஏற்று நடித்தது ஒரு பராரி கதாபாத் திரம். அதே ஆண்டில் வெளியான ‘என் தங்கை’ படத்தில் எம்.ஜி.ஆர். ஏற்றிருந்த ராஜேந்திரன் கதாபாத்திரத் துக்குக் கதாநாயகி கிடையாது. கண் பார்வையற்ற தங்கையின் மரணத் தால் மனமொடிந்த எம்.ஜி.ஆர்., கடலில் இறங்கி தற்கொலை செய்து கொள்வார்.