உள்ளம் கவர் கள்வன்

உள்ளம் கவர் கள்வன்
Updated on
1 min read

இருமுறை தேசிய விருது பெற்ற தனுஷ், ‘சூப்பர் ஆக்டர்’ என்றோ, ‘நடிப்புச் செல்வன்’ என்றோ இதுவரை எந்தப் பட்டத்தையும் சூட்டிக்கொள்ளாதவர். ‘புதுப்பேட்டை’ படத்தின் கொக்கி குமாரில் தொடங்கி ’பொல்லாதவன்’ பிரபு, ‘ஆடுகளம்’ கறுப்பு, ’வேலையில்லா பட்டதாரி’ ரகு, ‘அசுரன்’ சின்னசாமி, ‘திருச்சிற்றம்பல’த்தின் பழம், ‘குபேரா’வின் தேவா எனத் தன் மிகையில்லாத, தேர்ச்சி மிக்க நடிப்பின் வண்ணத்தில், மாஸ் மசாலா நாயக பிம்பத்தைத் தாண்டிப் பல நல்ல கதாபாத்திரங்களை நமக்குப் பரிமாறியிருக்கிறார்.

இந்த வரிசையில் ’கர’ படத்தில் அவர் ஏற்று நடித்துள்ள கரசாமி என்கிற கதாபாத்திரமும் இடம்பெறும் என்று அப்படத்தின் ஆடியோ வெளியீட்டில் கூறியிருக்கிறார் படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in