

தேசிய விருதுகள், மாநில விருதுகள், கோவா, திருவனந்தபுரம் படவிழாக் களில் வழங்கப்படும் விருதுகளுக்குப் பிறகு தற்போது மதிக்கப்படும் ஒரு விருது என்றால், அது தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருது (SIIMA).
அதில் சசிகுமார் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆறு விருதுகளை வென்றுள்ளது. அதில் ஒன்று சிறந்த நடிப்புக்காக சசிகுமாருக்குக் கிடைத்திருக்கிறது.
அதேபோல், சசியின் நீண்டகால நண்பரான சமுத்திரக்கனி ‘காந்தா’ படத்துக்காகச் சிறந்த துணைநடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
இயக்கம் என்பதையே மறந்துபோய், நண்பர்கள் இருவரும் திரை நடிப்பில் வெகுதூரம் வந்துவிட்டார்கள். அதிலும் தென்னிந்திய மொழி சினிமாக்கள் அனைத்திலும் சமுத்திரக்கனி புகழ்பெற்றுவிட்டார்.
மற்ற மூன்று தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் பெரும்பாலான மாஸ் ஹீரோ படங்களில் சமுத்திரக்கனி துணைக் கதாபாத்திரம் ஏற்றுவிடுகிறார்.
சசியோ ‘கருடன்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘மைலார்ட்’ என்று விட்ட இடத்தைப் பிடித்து விட்டார். ஓர் இடைவேளைக்குப் பிறகு நண்பர்கள் இருவரும் இணைந்திருக்கிறார்கள். சமுத்திரக்கனி எழுதி, இயக்கும் ‘ஸ்கூல் பஸ்’ என்கிற படத்தில் சசிகுமார் நடிக்கிறார்.