

சுமார் நூறாண்டுக் காலத் தமிழ், தெலுங்கு சினிமா வரலாற்றில் அழியாத ஓர் இடத்தைப் பெற்றவர் நடிப்புக்காகப் பெயர்பெற்ற சித்தூர் நாகையா.
அவரது திரைப் பயணத்தை இவ்வளவு சுருக்கமாக, ஒரு ஹைக்கூ போலச் சுவாரசிய மாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர் கி.ரமேஷ் (நோபல் பரிசுபெற்ற ஜான் ஸ்டீபனின் ‘கிரேப்ஸ் ஆஃப் ராத்’ நாவலைத் தமிழில் ‘கோபத்தின் கனிகள்’ என்கிற தலைப்பில் மொழிபெயர்த்தவர்).
நாகையா ஏற்ற குணச்சித்திரக் கதாபாத்திரங்கள், முதன்மைக் கதாபாத்திரங் களுடன் ஒப்பிடும்போது அளவில் சிறியதாக இருந்தாலும் நடிப்பில் மறக்கவே முடியாத பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை இந்நூல் அழகாக நினைவூட்டுகிறது. ‘ஏழைபடும்பாடு’ என்றைக்கும் மறக்கவே முடியாத ஒரு படம்.
நாகையா ஒரு சுதந்திரப் போராட்ட வீரர், ஈகைக் குணம் மிக்கவர் உள்ளிட்ட வெளித்தெரியாத அவருடைய பன்முகத்தை அறியும் வாய்ப்பை இந்நூல் அளிக்கிறது. 1938இல் தொடங்கி 1973 வரை அவர் நடித்த படங்களின் முழுமையான பட்டியலையும் மொழிவாரியாக வழங்குகிறது இச்சிறுநூல்.
நாகையா என்றொரு நடிகர் கி.ரமேஷ் | 75 பக்கங்கள்
விலை ரூபாய் 110/-
நாதன் பதிப்பகம், சாலிகிராமம்,
சென்னை - 93 தொடர்புக்கு: 98840 60274