

எங்க வீட்டுப் பிள்ளை | படங்கள் உதவி: ஞானம்
‘நாயக சினிமா’வில், சாகசம் - நடிப்பு என எதிரும் புதிருமான கதைகளில் நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். - சிவாஜி இருவரையும் இணைத்த ‘கூண்டுக்கிளி’ என்கிற எதார்த்தம் எடுபடாமல் போனதில் வியப்பில்லை.
படத்தின் வணிக வெற்றியும் அதனால் வரும் திரையரங்க வசூலும் தான் ‘மாஸ் ஹீரோ’க்களின் செல் வாக்கை உறுதிசெய்யும் என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர்., தன்னை ஒரு வசூல் சக்கரவர்த்தியாக நிலைநிறுத்திக் கொள்ளும் கதைகளைத் தேடத் தொடங்கினார்.