சந்தோஷம் கொண்டாடும் தீபாவளி.. | எண்ணமெல்லாம் கண்ணதாசன் 5

‘மூன்று தெய்வங்கள்’ |  படம் உதவி: ஞானம் |

‘மூன்று தெய்வங்கள்’ |  படம் உதவி: ஞானம் |

Updated on: 
2 min read

தீபாவளி என்றாலே புத்தாடை, வாணவேடிக்கைகள், இனிப்புகள் என்று மனதுக்கு இன்பம் தரும் எல்லா விஷயங்களும் ஒன்றுசேர்ந்த ஒரு பண்டிகை. அந்தப் பண்டிகைக் கொண்டாடும் காட்சிக்காக 1971இல் வெளிவந்த ‘மூன்று தெய்வங்கள்’ படத்துக்காக கவியரசர் புனைந்த பாடல், அதுவரை எழுதப்பட்ட தீபாவளிப் பாடல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு முத்திரைப் பாடல்.

கதைப்படி சிறையிலிருந்து தப்பிய மூன்று கைதிகள் (நடிகர் திலகம், நாகேஷ், முத்துராமன்), ஒரு கிராமத் தில் நடுத்தர வர்க்கத்து மனிதரின் (எஸ்.வி.சுப்பையா) வீட்டில் அடைக் கலம் ஆவார்கள். சுப்பையா காட்டும் கலப்படமற்ற அன்பினால் மனம் திருந்தும் அவர்கள், சுப்பையாவின் குடும்ப உறுப்பினர்களாகவே தங்களைக் கருதி தீபாவளியை அவருடைய குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடுவது போன்ற காட்சி அமைப்பு

அது.

அதற்கு கவியரசர் எழுதிய பாடல் ஒரு சாதாரணக் கொண்டாட்டப் பாடலாகச் சுருங்கிவிடவில்லை. கலப்படம் இல்லாத தாயன்பு, சமுதாயச் சிந்தனை, நேர்மறை எண்ண அலை களின் வெளிப்பாடு அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பாடலாக அமைந்து வெற்றி பெற்றதுதான் அதன் தனிச் சிறப்பு.

கவிஞர் பாவிய சொற்களுக்கு ஏற்ப, மகிழ்ச்சி வழிந்தோடும் இல்லத்தை மெல்லிசை மன்னர் அப்படியே தனது இசையால் கண்முன் நிறுத்த, ஏழிசை வேந்தர் டி.எம். சௌந்தரராஜனோ பாடலை மத்யமச் சுருதியிலேயே கம்பீரம், உற்சாகம் கலந்த குரலில் பாடல் வரிகளின் ஆழத்தை அப்படியே உள்வாங்கி, உணர்ச்சிபூர்வமாக மனதில் நிற்கும் வண்ணம் தனித்தன்மை யுடன் பாடி, கவிஞரின் வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

பாடலின் முகப்பிசையே தீபாவளிக்கு ஒரு முன்னோட்டமான இசையாக ஒலிக்கும்:

‘தாயெனும் செல்வங்கள் தாலாட்டும் தீபங்கள்

வைரங்கள் போலே ஒளி விடட்டும்’

Loading content, please wait...

X