கடவுளுக்கும் சொல்லித் தரும் கவிஞன்! | எண்ணமெல்லாம் கண்ணதாசன் 3

‘சுவாமி ஐயப்பன்’ 1975 | படங்கள் உதவி: ஞானம்

‘சுவாமி ஐயப்பன்’ 1975 | படங்கள் உதவி: ஞானம்

Updated on: 
2 min read

எழுபதுகளில் தமிழில் முன்னணிப் பாடகராக வலம்வரத் தொடங்கிய கே.ஜே.யேசுதாஸுக்கு அசைக்க முடியாத இடத்தைப் பெற்றுக்கொடுத்ததில் கவியரசரின் ‘திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே...’ பாடலும் ஒன்று. இப்பாடல் இடம்பெற்ற படம் ‘சுவாமி ஐயப்பன்’ (1975).

மலையாளம், தமிழ் இரண்டு மொழிகளிலும் வெளிவந்த இப்படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு கவியரசு கண்ணதாசனே வசனங்களையும் பாடல்களையும் எழுதி இருந்தார். இந்தப் படத்துக்கு இரண்டு மொழிகளிலும் இசை அமைத்தவர் ஜி.தேவராஜன்.

கொடியவள் மகிஷியின் கொடுமையிலிருந்து அனைவரையும் காப்பதற்காக, திருமாலை வேண்டிப் பாடிக்கொண்டு வரும் நாரத முனிவருக்கு ஏற்ப நயம்பட வார்த்தைகளை அமைத்திருக்கிறார் கண்ணதாசன்.

இதே காட்சிக்கு வயலார் ராமவர்மா மலையாளத்தில் ‘ஹரி நாராயண கோவிந்தா’ என்கிற பாடலை எழுத, அதற்குச் சாருகேசி ராகத்தில் இசை அமைத்திருந்தார் தேவராஜன். கண்ணதாசன் எழுதிய வரிகளுக்கு பைரவி ராகத்தைப் பயன்படுத்தி இருந்தார்.

மலையாளப் பாடலை அப்படியே தமிழாக்கம் செய்யாமல், அதில் சொல்லப்படாத வாழ்க்கைமுறை வெற்றிக்கான சூட்சுமத்தைத் தனது பாடலில் பதித்திருக்கிறார் பாருங்கள். அங்கே தான் தனித்து நிற்கிறார் கண்ணதாசன்! மலையாளத்தில் இரண்டே இரண்டு சரணங்களில் தனது கோரிக்கையை வைத்துப் பாடலை வயலார் முடித்துவிட்டார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in