தடம் தெரியாமல் சுடலாமா? | சுட்ட கதை 16

தடம் தெரியாமல் சுடலாமா? | சுட்ட கதை 16
Updated on
2 min read

இந்த வாரம், ‘இன்ஸ்பிரேஷன்’ என்று அழைக்கப்படும் புத்தி சாலித்தனமான சுட்ட கதை ஒன்றைப் பார்க்கலாம். இங்கே குறிப்பிடவிருக்கும் அந்தத் தமிழ்ப்படம், எந்த முறையில் ‘இன்ஸ்பயர்’ ஆகி எடுக்கப்பட்டது என்பதை, இரண்டு படங்களின் கதையைப் படித்தால் மட்டும் தெரியாது. அந்த இரண்டு படங்களையும் முழுவதும் பார்த்தால் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். அவ்வாறு எடுக்கப்படும் படங்களைக் கிட்டத்தட்ட ஒரிஜினல் என்றே சொல்லலாம்.

இப்படிச் சொல்லக் காரணம், இப்படியும் படம் எடுக்கலாம் என்று சொல்வதற்கே! இந்த வகை ‘இன்ஸ்பிரேஷன்’ இயக்கு நர்களின் புத்திசாலித்தனத்தையே காட்டுகிறது. 2006ஆம் ஆண்டில் கேண்டோனீஸ் மொழியில் (ஹாங்காங், மக்காவ், தெற்கு சீனா ஆகிய பகுதிகளில் பரவலாகப் பேசப்படும் சீன மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது) ‘டாக் பைட் டாக்’ (Dog bite Dog) என்கிற திரைப்படம் வெளியானது.

இது அப்போது பரவலாகப் பேசப்பட்டு, பல திரைவிழாக்களில் திரையிடப் பட்டுப் பாராட்டுப் பெற்ற படம். இதன் கதை கம்போடியாவில் நடக்கிறது. பணம் கொடுத்தால் என்ன வேண்டு மானாலும் செய்யத் துணியும் ஒருவன்தான் கதையின் நாயகன். நன்றாகப் பயிற்றுவிக்கப்பட்டு மக்களின் முன் சண்டையிடும் ‘ரத்தக் களரி’யான விளையாட்டுகளில் சிறந்து விளங்கிவருகிறான்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in