மூன்று படங்களின் சுக்குக் கஷாயம்! | சுட்ட கதை 23

மூன்று படங்களின் சுக்குக் கஷாயம்! | சுட்ட கதை 23
Updated on
2 min read

ஒரு சில படங்கள் நேரடி நகல்களாக இல்லாமல் போனாலும் வேறு சில படங்களை நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். காரணம் அந்தப் படங்களி லிருந்து பல காட்சிகள், கதாபாத்திரங்கள், கதை ஆகியவை எடுக்கப்பட்டு, கொஞ்சம் மாற்றப்பட்டே தமிழில் வந்திருக்கும்.

அவற்றை ‘இன்ஸ்பிரேஷன்’ என்கிற வட்டத்துக்குள் அடக்க முடியாது. உறுதியாக அவை நகல்களே! 1974இல் ‘த கான்வர்சேசன்’ (The Conversation) ஜீன் ஹேக்மேன் நடிப்பில் ஹாலிவுட்டில் வெளியான புகழ்பெற்ற படம். ‘காட் ஃபாதர்’ படத்தின் இயக்குநர் ஃபிரான்சிஸ் ஃபோர்டு கோப்பலா தான் இந்தப் படத்தின் இயக்குநர்.

கதைப்படி பிறர் பேசுவதை ஒட்டுக்கேட்டுப் பதிவுசெய்வதில் நாயகன் கில்லாடி. அதுதான் அவனது வேலை. அவனுக்கு ஒரு குழுவும் உண்டு. ஒருநாள் அவனுடைய குழு இருவர் பேசுவதைப் பதிவுசெய்கிறது. அந்தப் பதிவில் ஒரு கொலை பற்றி அவர்கள் பேசுவதைக் கேட்டு நாயகன் பதறுகிறான்.

காரணம், கொல்லப்படுவார்கள் என்று தெரிந்தும் முன்பொரு காலத்தில் அவனால் காப்பாற்ற முடியாமல் போய்விட்ட சில மரணங்களைப் பற்றிய குற்ற உணர்ச்சி அதன்பின் என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in