என்னப்பா இப்படிப் பண்றீங்களேப்பா? | சுட்ட கதை 18

என்னப்பா இப்படிப் பண்றீங்களேப்பா? | சுட்ட கதை 18
Updated on
2 min read

வாழ்க்கையை அழகாக்குபவர்கள் குழந்தைகள்தான்! சாம் டாசனின் வாழ்க்கையை அழகாக்குபவள் அவரின் ஏழு வயது மகள் லூசி. மனநலன் தொடர்பான குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர் சாம்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் விளிம்புநிலைப் பெண் ஒருவரோடு சாம் கொண்டிருந்த தொடர்பால் லூசி பிறக்க, அந்தப் பெண்ணோ குழந்தையை விட்டுவிட்டு ஓடிவிடுகிறார்.

இதனால் லூசியை வளர்க்கும் பொறுப்பு, மனநலன் சரியில்லாத சாமுக்கு வருகிறது. அவர் ஸ்டார்பக்ஸ் காபி கடையில் வேலை செய்கிறார். அவரைப் போலவே மனநலக் குறைபாடு கொண்ட சில மாற்றுத்திறனாளி நண்பர்கள் அவருக்கு உண்டு. சாமின் நிலையறிந்த பக்கத்து வீட்டுக்காரப் பெண்ணும் அவ்வப்போது லூசியைப் பார்த்துக்கொள்வார்.

பள்ளி நண்பர்கள் அனைவரும் தன்னுடைய தந்தை சாமை, அவரின் மனநலன் தொடர்பான குறைபாடுகளால் கிண்டல் செய்கிறார்கள் என்கிற வருத்தம் லூசிக்கு உண்டு. அவளின் ஏழாவது பிறந்தநாள் விழாவில் சாமின் மனநலக் குறைபாட்டால் ஒரு சண்டை வெடிக்க, அது மிகப்பெரிய பிரச்சினையாக மாறுகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in