அசலுக்கு மரியாதை செய்த படைப்பாளி! | சுட்ட கதை 45

 ‘அதிகாலையின் அமைதியில்’ (The Dawns here are quiet)

‘அதிகாலையின் அமைதியில்’ (The Dawns here are quiet)

Updated on: 
4 min read

சிறந்த திரைப்படம் ஒன்றைக் காணும் ஒரு ‘கிரியேட்டர்’ பெறும் தாக்கம் என்பது திரையரங்கோடு முடிந்து விடுவதில்லை. அது பல தலைமுறைப் படைப்பாளிகளின் மனங்களில் மீண்டும் மீண்டும் விதையாக விழுந்து, புதிய கலைப்படைப்புகளாக முளைத்தெழுகிறது.

சினிமா வரலாற்றில் ஒரு காவியத் திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டு, அதற்குச் செலுத்தும் மிக உயர்ந்த மரியாதையாக (Tribute) உருவெடுத்த பல திரைப்படங்கள், மூலப் படைப்பையே விஞ்சும் அளவுக்குப் புதிய மைல்கற்களை எட்டியிருக்கின்றன.

ஏனென்றால் ஒரு மாபெரும் படைப்புக்கு உண்மையான அஞ்சலி செலுத்துதல் என்பது, அதை அப்படியே சுட்டு நகலெடுப்பது அல்ல என்பதைப் பார்த்தோம் அல்லவா? மூலப் படத்தின் ஆன்மாவைத் தொட்டு, அதன் மைய உணர்வையும் அது ரசிகனுக்குக் கொடுத்த அனுபவத் தையும் உள்வாங்கிச் செய்யும் இந்த ரசவாதம் எல்லாருக்கும் தெரிந்த கலை அல்ல.

ஏனென்றால், மூலப் படத்தின் ஆன்மாவைப் புதிய களத்தில் பொருத்துவது, ஆழ்ந்த இலக்கிய வாசிப்பும் வாழ்வனுபவமும் தன்வாழும் நிலத்தின் மக்களின் வாழ்க்கையும் அணுவணுவாகத் தெரிந்து வைத்திருக்கும் ஒரு படைப்பாளிக்குத் தான் அது சாத்தியம்.

அப்போதுதான் உள்வாங்கிக்கொண்ட படத்தின் ஆன்மாவை, சமகாலப் பின்னணி யிலோ அல்லது முற்றிலுமாகத் திரையில் சொல்லப்படாத கலாச்சாரச் சூழலிலோ அவரால் உயிர் கொடுக்க முடியும்.

அதேபோல் மூலப் படத்தின் பாதிப்பு இருந்தாலும் இயக்கம், திரைக்கதை, காட்சி அமைப்பு எனப் படைப் பாளியின் சொந்த முத்திரையும் கலாபூர்வமான பார்வையும் அதில் பேசப்படும் அம்சமாக மாறியிருக்கும்.

அப்படித் தன்னைப் பாதித்த மூலப் படங்களுக்கு உண்மையான ‘ட்ரிபியூட்’ செய்த ஒரு திரைக்கலைஞர் நம் தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களைக் கொடுத்து, நம்மிடமிருந்து விடை பெற்றுக்கொண்டார்.

அவர் எவ்வாறு தன் மீது தாக்கம் செலுத்திய கதைகளைத் தமிழுக்கு எப்படிக் கொண்டுவந்தார், தன்திரைமொழியின் மூலம் ஒரிஜினலாகப் பிற மொழிகளில் எழுதி, எடுக்கப்பட்ட அந்தக் கதைகளுக்கு மரியாதை செய்தார் என்பதை இந்த அத்தியா யத்தில் பார்ப்போம்.

யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக ஒரு படத்தைச் சுட்டு, அதைத் தமிழில் எடுத்துப் பேர் வாங்கும் இயக்குநர்கள் மத்தியில் இவர் உண்மையிலேயே வித்தியாச மாக, நேர்மையாக இயங்கியவர். அவர்தான் மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in