மீண்டும் 'உள்ளத்தை அள்ளித்தா' மேஜிக்குடன் சுந்தர்.சி!

மீண்டும் 'உள்ளத்தை அள்ளித்தா' மேஜிக்குடன் சுந்தர்.சி!
Updated on
2 min read

கடந்த 1996-ல் சுந்தர். சி இயக்கத்தில் வெளியாகி ‘பிளாக் பஸ்டர்’ வெற்றியைப் பெற்ற படம் ‘உள்ளத்தை அள்ளித்தா’. ஊட்டியைக் கதைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்களின் வரிசையில் மாபெரும் காதல், நகைச்சுவைத் திரைப்படமாக ‘உள்ளத்தை அள்ளித்தா’வுக்கு ரசிகர்களின் மனதில் தனியிடம் உண்டு. தற்போது மீண்டும் 'உள்ளத்தை அள்ளித்தா' மேஜிக்கை கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்து, ‘காபி வித் காதல்' என்கிற புதிய படமொன்றைய இயக்கி முடித்திருக்கிறார். காலமாற்றத்துக்கு ஏற்ப தன்னை அப்டேட் செய்துகொண்டு எப்போதும் முன்னணி இயக்குநர்கள் வரிசையில் தன்னை தக்கவைத்து கொண்டிருப்பவரான சுந்தர்.சி., ரசிகர்கள், கவலைகளை மறந்து குடும்பத்துடன் சிரித்து மகிழ, கலகலப்பான படங்களை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்து வருபவர். அந்த வகையில் ‘காபி வித் காதல்' படத்தையும் முழுநீள காதல் நகைச்சுவைப் படமாக எடுத்திருக்கிறார். ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தைப் படம் பிடித்தது போலவே, சென்னையில் தொடங்கி 90 சதவீத காட்சிகளை ஊட்டியில் படமாக்கியிருக்கிறார். ‘காபி வித் காதல்’ படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 75 நாட்கள் ஊட்டியில் நடைபெற்றுள்ளது.

‘அரண்மனை-3’ படத்தைத் தொடர்ந்து உருவாகியுள்ள ‘காபி வித் காதல்’ படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட், பென்ஸ் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் என மூன்று கதாநாயகர்கள் நடிக்க, அவர்களுக்கு ஜோடியாக மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில். மொத்தம் 8 பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன .

காபி வித் காதல்
காபி வித் காதல்

ஒரு குடும்பத்தில் உள்ள மூன்று சகோதரர்கள் அவர்களுக்குள் ஒத்துப்போகாத வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறார்கள். இசையமைப்பாளராக ஒருவன் , ஐ டி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவன், சமையல் வேலையில் ஆர்வம் உடைய ஒருவன். இந்த மூவரின் வாழ்க்கையிலும் காதல் நுழைந்ததும் ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி தனது பாணியில் காதல் நகைச்சுவைப் படத்தை இயக்கியிருக்கிறாராம் சுந்தர்.சி. படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் ஜூலை மாதம் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in