விந்தை நாயகன் மகேந்திரன்

விந்தை நாயகன் மகேந்திரன்
Updated on
1 min read

தமிழ் சினிமாவில் மிக இளவயது நாயகன் என்ற பெயரைத் தட்டிச் சென்றவர் மகேந்திரன். மூன்று வயது குழந்தை நட்சத்திரமாக ‘நாட்டாமை’ படத்தில் அறிமுகமானார்.

கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் ‘மாஸ்டர் மகேந்திரனாக’ச் சுமார் 110 படங்களில் நடித்து அதிகப் படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் என்று சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர் அவர். சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான மாநில அரசின் விருதுகளையும் பெற்றவர். கடந்த ஆண்டு வெளியான ‘விழா’படத்தில் நாயகன் ஆனார்.

இழவு வீடுகளில் தன் பாட்டிக்குத் துணையாகச் சென்று ஒப்பாரி பாடும் கதாநாயகியைக் காதலிக்கும் இளம் பறையிசைக் கலைஞனாக நடித்து ரசிகர்களையும் விமர்சகர்களையும் ஆச்சரியப்படுத்தியிருந்தார் மகேந்திரன். 24 நான்கு வயதில் கதாநாயகன் ஆகிவிட்ட இவர் அடுத்து என்ன படத்தில் நடிக்கிறார் என்பது தெரியாமல் இருந்து வந்தது.

“மிகக் கவனமாக எனக்கேற்ற வகையில் எனது ஒவ்வொரு படத்தின் கதையையும் தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்” என்று சொல்லும் மகேந்திரன் ‘விந்தை’ என்ற முழுநீள நகைச்சுவைப் படத்தில் தற்போது நாயகனாக நடித்துவருகிறார். நாயகியாக மனிஷாஜி நடிக்கிறார்.

இவர் ‘கம்பீரம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பிறகு ‘நண்பர்கள் கவனத்திற்கு’ என்ற படத்தில் நாயகியாக நடித்தார். இந்தப் படத்தை எழுதி இயக்குபவர் லாரா. இரண்டு மணிநேரம் இடைவிடாமல் சிரிக்கலாம். மகேந்திரன் காமெடியில் ஒரு கை பார்த்திருக்கிறார்” என்கிறார் இயக்குநர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in