திரைவிழா: திரையரங்குகள் தரவேண்டிய முன்னுரிமை!

திரைவிழா: திரையரங்குகள் தரவேண்டிய முன்னுரிமை!
Updated on
1 min read

ரகுமான், இனியா நடிப்பில் ஜாய்சன் இயக்கதில் உருவாகியிருக்கும் த்ரில்லர் படம் ‘சதுரஅடி 3500’. சமீபத்தில் நடத்த இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலைப்புலி எஸ். தாணு , கே. பாக்யராஜ் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினார்கள். சிறு படங்கள் திரையரங்குகளால் புறக்கணிக்கப்படுவதை பற்றி பாக்யராஜ் பேசும்போது;

“ எல்லா திரையரங்குளிலும் எப்போதும் ஏதேனும் ஒரு சிறிய படங்கள் ஓடிக்கொண்டிருக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் ஒரு சட்டத்தை ஏன் போடக்கூடாது. எப்போது பார்த்தாலும் பெரிய நடிகர்களின் படம்தான் ஒடவேண்டும் என்று எந்த நியதியும் இல்லையே? ஒவ்வொரு திரையரங்கிலும் சிறிய படங்களுக்கு என்று காட்சி நேரங்களை கட்டாயமாக ஒதுக்கவேண்டும். அதற்காக காலை காட்சியை ஒதுக்கக்கூடாது.

பெரிய நடிகர்கள் நடித்திருந்தால் அந்த படத்தை காண ரசிகர்கள் காலை காட்சிக்கு வருவார்கள். ஆனால் புதுமுகங்கள் நடித்திருக்கும் சின்ன படங்களுக்கு ரசிகர்கள் வரமாட்டார்கள். இதைக் காரணமாக காட்டி பல திரையரங்குகளிலிருந்து படத்தை தூக்கிவிடுகிறார்கள். படம் பார்த்த ரசிகர்களின் ‘மவுத் டாக்’ பரவுவதற்குள் படத்தை தூக்கிவிட்டால் சின்ன படங்கள் எப்படி ஒடும்? அதனால் சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் முன்னுரிமை அளிக்கவேண்டும்.

சின்னப் படங்கள்தானே அதிகமாகத் தயாராகின்றன. அவை இல்லாமல் சினிமா எது? எனவே கண்டிப்பாக திரையரங்குகள் சிறு படங்களுக்கு காட்சிநேரம் ஒதுக்குவதிலிருந்து ஒதுங்கிச் செல்ல முடியாதவாறு ஒரு நடைமுறையை உருவாக்கவேண்டும்.” என்றார். ரைட்வியூ சினிமாஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை ஆர்.பி.எம் சினிமாஸ் வாங்கி வெளியிடுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in