Published : 07 Mar 2014 00:00 am

Updated : 07 Jun 2017 10:58 am

 

Published : 07 Mar 2014 12:00 AM
Last Updated : 07 Jun 2017 10:58 AM

அப்போ மைனா இப்போ பூமாரி!: அமலா பால்

கன்னடம் தவிர்த்த தென்னிந்திய மொழிகளில் தலா இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் அமலா பால். இன்று வெளியாகும் ‘நிமிர்ந்து நில்’படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருக்கும் அவர் முன்பை விட அழகாக இருக்கிறார். அழகான தமிழும் வசமாகிவிட்டது.

கன்னட சினிமாவுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை?

மைனாவோட கன்னட ரீமேக்ல நடிக்க எனக்குத்தான் முதல் வாய்ப்பு கொடுத்தாங்க. ஆனால் அப்போ முடியல. வரிசையா தமிழ் படங்கள்ல நடிச்சிட்டு இருந்தேன். என்னோட கேரக்டருக்கு பேர் கிடைக்கும்ன்னா எந்த லாங்குவேஜ்லயும் நடிக்கலாம். எனக்குத் தயக்கம் இல்ல. ஆனா அந்தப் படம் ஒட்டுமொத்தமாகவும் நல்ல பேக்கேஜா இருக்கனும்.

மைனாவுக்கு அப்புறம் தமிழ்ல பேர் சொல்ற மாதிரி கேரக்டர் உங்களுக்கு அமையலையே?

தலைவா படத்துல மீரா நாராயணன் ஏ.சி.பி.யா நடிச்சது எல்லோருக்கும் பிடிச்சதே. உங்களுக்கு மட்டும் பிடிக்கலைன்னு நினைக்கிறேன்.

அந்தப் படம் சரியா போகலையே?

நோ நோ… எனக்கு தலைவா படத்துல நல்ல பேர். போலிஸ் யூனிஃபார்ம் எனக்கு சூப்பர்னு என்னோட பேன்ஸ் டுவிட் பண்ணி குவிச்சுட்டாங்க. பார்த்திருப்பீங்களே?

மைனா மாதிரி பவர்ஃபுல் கேரக்டர்?

மைனா இடத்துல இப்போ நிமிர்ந்து நில் பூமாரி இருக்கா. ரொம்ப நாள் கழிச்சு நடிப்புக்கு நல்ல தீனி கிடைச்சுது. அதுக்காக மத்த கேரக்டர்ஸ்ல அலட்சியமா நடிப்பேன்னு அர்த்தமில்ல. சமுத்திரக்கனி நல்ல நடிகர். அவர் நடிச்சுக் காட்டினதை அப்படியே இமிடேட் பண்ண டிரை பண்ணியிருக்கேன். அதுக்கே பெரிய பேர் கிடைக்கும். கிராமத்துலேந்து சிட்டிக்கு வர்ற கேரக்டர். வந்தாலும் சிட்டி ஆண்கள் கிட்டே ரொம்ப கவனமாக இருப்பா.

வேலையில்லா பட்டதாரி படத்துல டாக்டர் ஷாலினியா நடிச்சிருக்கேன். இதுல நோ கிளாம். நமக்கொரு பொண்ணு இருந்தா எப்படி இருக்க ணும்னு மிடில் கிளாஸ் அப்பா அம்மா நினைப்பாங்களோ அப்படி ஒரு க்யூட்டான கேரக்டர். இதுலயும் பின்னியிருக்கேன்.

ஜெயம் ரவி - தனுஷ் யார் பெட்டர் ஆக்டர்?

ஜெயம் ரவி பயங்கர ஹார்ட் ஒர்க்கர். நிமிர்ந்து நில்ல என்னைவிட அதிக ஸ்கோப் அவருக்கு. டபுள் ரோல். செட்ல அவர் ஃபயர் மாதிரி. பேக் அப் சொல்லிட்டா கேம்ப் ஃபயர்ல கிடைச்ச ஃபிரெண்ட் மாதிரி சாஃப்டா ஆயிடுவார். தனுஷைப் பார்த்தா ப்ரிபேர்டா இருக்கிற மாதிரியே தெரியாது. செட்ல சிரிச்சு விளையாடிட்டு இருப்பார். ரொம்ப ஃபன். ஷாட் ரெடினு சவுண்ட் வந்துட்டா அவர் கிட்ட வரும் பாருங்க ஒரு சேஞ்ச்... தனுஷ் கிட்ட அதை கத்துகிட்டேன். அப்புறம் அவரோட அன்பு.

தனுஷ் அம்மா வீட்டிலேர்ந்து சமைச்சு அனுப்புற லஞ்ச், டின்னர் எல்லாத்தையும் ஷேர் பன்ணித்தான் சாப்பிடுவார். எங்க கெமிஸ்ட்ரி கண்டிப்பா கலக்கும். ஏன்னா இந்தப் படத்தோட டைரக்டர் வேல்ராஜ். என்னை மாதிரி யங் ஸ்டார்ஸை அழகா காட்டுறதுல அவரை அடிச்சுக்க ஆள் இல்ல. அவரே டைரக்ட் பண்ணும்போது எவ்வளவு நல்லா இருக்கும்னு யோசிச்சு பாருங்க.

லால்கூட மறுபடியும் நடிக்கீறீங்களே?

கொடுத்து வச்சிருக்கணும். தமிழ்ல எனக்கு எந்த அளவு நல்ல கேரக்டர்ஸ் கிடைக்குதோ அதைவிட பெட்டரா மலையாளத்துல கிடைக்குது. லாலோட்டன்கூட முதல்ல நடிச்ச ‘ரன் பேபி ரன்’ ஹிட் அடிச்சது. இப்போ ‘லைலா ஓ லைலா’வும் ஹிட் அடிக்கும். எங்க டீம் அடுத்த வருஷம் தேர்ட் டைம் ஒண்ணா சேர்ந்தாலும் ஆச்சரியப்பட எதுமில்ல.

25 படங்களை நெருங்கீட்டீங்க இப்போ எப்படி ஃபீல் பண்றீங்க?

பணத்துக்காக நடிக்கணுங் கிறதைவிட ஒரு நடிகையா எனக்கு திருப்தி தர்ற கேரக்டர்ஸ்ல அதிகமா நடிக்க விரும்பறேன். அப்புறம் தமிழ், மலையாளம், தெலுங்கு மூணு மொழி ரசிகர்களுக்கும் என்னை பிடிக்குது. இதுக்குமேல எனக்கு பெரிசா எதுவும் வேணாம்.

காதலர் தினத்துக்கு யாருக்கு பரிசு கொடுத்தீங்க?

இப்போ யாரையும் நான் காதலிக்கல. காதலிச்சா கண்டிபா கிப்ட் தருவேன். அதுக்கு காதலர் தினம் மாதிரி ஸ்பெஷல் டே தேவையில்லை.


அமலா பால்ஜெயம் ரவிதனுஷ்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author