

முகப்புத்தகத்தில் ஒரு கோடி ரசிகர்களின் லைக்கு களை எட்டிப்பிடித்த இந்தியப் பிரபலங்களில் ஸ்ரேயா கோஷலுக்குத் தனியிடம். டிவிட்டரி லோ இவரை 27 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். கடந்த 12ஆம் தேதியன்று முப்பது வயதை நிறைவு செய்த இந்த இளம் இந்தியத் திறமைசாலிக்கு காஷ்மீர் முதல் குமரிவரை ரசிகர்கள். இந்தி, வங்கமொழியில் அதிக பாடல்களைப் பாடும் ஸ்ரேயா, பிரபலமான எல்லா இந்திய மொழிகளிலும் தேசம் முழுவதும் பறந்து பறந்து பாடும் வானம்பாடி! ‘தேவதாஸ்’ இந்திப் படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர், அதன் பின்பு பாடிய பாடல்களெல்லாம் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டடித்தன. தேசிய விருதில் தொடங்கி பல்வேறு விருதுகள் நிறைந்த வீடு இவருடையது.
1984இல் மேற்கு வங்கத்தில் பிறந்த இந்தத் தேன்குரலி, கடந்த 11 ஆண்டுகளாகப் பாடிவரும் நிலையில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியிருப்பார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இதுவரை 150 பாடல்களைக்கூடத் தாண்டவில்லை. அன்னம் போல தனக்குப் பிடித்ததை மட்டுமே பாடும் தீர்க்கமான குணம், தென்னிந்தியச் சாயல் என்று ஜொலிக்கும் ஸ்ரேயா கோஷலை திரைப்படத்தில் நாயகி ஆக்கிவிடலாம் என்று ஆசைப்பட்ட அத்தனை பேருக்கும் இவர் சொன்ன ஒரே வார்த்தை
“ சாரி.. நடிப்பதில் விருப்பமில்லை”.