மும்பை கேட்: உதவியாளரின் உடலைச் சுமந்த சூப்பர் ஸ்டார்!

மும்பை கேட்: உதவியாளரின் உடலைச் சுமந்த சூப்பர் ஸ்டார்!

Published on

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக விளங்கி, இன்று வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடித்து ஆச்சரியப்படுத்தி வருபவர் அமிதாப் பச்சன். அவரிடம் நம்பிக்கைக்குரிய தனிச் செயலாளராகச் சுமார் 40 வருடங்கள் பணிபுரிந்துவந்த ஷீத்தல் ஜெயின் தனது 77-வது வயதில் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.

அவரது இறுதிச் சடங்கில் தன் மகன் அபிஷேக்குடன் கலந்துகொண்ட அமிதாப் பச்சன், ஷீத்தல் ஜெயினின் உடலைத் தன் மகனுடன் இணைந்து சுமந்து சென்றார். தனது உதவியாளரின் மறைவு குறித்து, “கிட்டத்தட்ட 40 வருடங்களாக என் பணிச் சுமைகளைத் தன் தோள்களில் சுமந்தவர். எல்லாக் காலகட்டத்திலும் என்னோடு இருந்தவர்.

மென்மையானவர், எளிமையானர், கடும் உழைப்பாளி. நேர்மைக்கான எடுத்துக்காட்டு.  இன்று அவரது உடலைச் சுமந்து சென்றேன். இவரைப் போன்ற மனிதர்கள் இப்போது கிடைப்பதில்லை.

என் அலுவலகத்தில், எங்கள் தினசரி வாழ்க்கையில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது” என்று தனது இணையதளத்தில் உணர்ச்சி பொங்க உதவியாளருக்கு விடை கொடுத்திருக்கிறார் அமிதாப் பச்சன். தன் உதவியாளரின் உடலை அமிதாப் சுமந்துசெல்லும் ஒளிப்படங்கள் சமூக வலையில் வேகமாகப் பரவிவருகின்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in