

மா
துரி தீக்க்ஷித் என்றாலே ரசிகர்களால் மறக்க முடியாத அம்சம் அவரது நடனம். குத்துப் பாடல்களுக்கு மட்டுமே நடனம் ஆடிப் புகழ்பெற்றுவந்த நடிகைகளை ஓரம் கட்டிய பாலிவுட் கதாநாயகிகளில் மாதுரியின்நடனங்களுக்குப் பெரிய பங்கு உண்டு. குறிப்பாக, ஒரு பாடலை அவர்களால் மறக்கவே முடியாது.
1988-ல் வெளியான ‘தேசாப்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏக் தோ தீன்’ என்ற பாடலுக்கு மாதுரி ஆடிய நடனம் பெரும்புகழ் பெற்றது. தவிர அந்தப் பாடல் மூலம் ‘டான்ஸிங் ஸ்டார்’ ஆகப் புகழின் உச்சிக்கே சென்றார் மாதுரி.
இத்தனை புகழ்பெற்ற இந்தப் பாடலை இந்திப் பட உலகினர் மீண்டும் பயன்படுத்தியிருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், மாதுரி ஆடிய ஆட்டத்துக்குப் பதிலீடாக மற்றொரு நடிகை ஆடிவிட முடியுமா என்ற கேள்வி எழுமல்லவா! தன்னால் அது சாத்தியம் என ஆடி அசத்தியிருக்கிறார் ஜாக்குலின் பெர்னாண்டஸ்.
விரைவில் வெளியாகவிருக்கும் ‘பாகி 2’ படத்தில்தான் மீள்முயற்சியாக இந்தத் துள்ளல் பாடலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஜாக்குலினின் கவர்ச்சி ரசிகர்களை ஈர்க்கலாம், நடனம்?