

திராவிட அரசியல் சித்தாந்தத்தை எடுத்துப்பேசிய திரைப்படங்களின் வரிசையைக் குறிப்பிடும்போது ‘நல்லதம்பி’ (1949) படத்தைப் பின் தள்ளிவிடும் மனநிலை இருக்கிறது. ஆனால், திராவிட சினிமாவின் முதல் வீரிய விதை என்றால், அண்ணா கதை, வசனம் எழுதிய முதல் படமான ‘நல்லதம்பி’தான்.
அதன் நாயகன் அன்றைய காலக்கட்டத் தமிழ் சினிமா வின் சூப்பர் ஸ்டார் அல்ல! தொண்ணூறுகளில் தொடங்கி, இன்றைய 2கே, ஜென் இசட் தலைமுறை வரை, தமிழ் சினிமாவில் ‘உடல்கேலி’, ‘உருவக்கேலி’ செய்வதை நகைச்சுவை யின் ஒரு வடிவமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று பேசி வருகிறார்கள்.