இந்து டாக்கீஸ்
தமிழ்நாட்டின் மருமகனைத் தெரியுமா? - பி.கே.மேதினி நேர்காணல்
கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் வரலாற்றுக்கு நிகரான வயதுடன் துணிச்சலான ஒரே ஒரு பெண் இன்று உயிருடன் இருக்கிறார். தன்னுடைய 96ஆம் அகவையிலும் அவரைக் கேரளம் எங்கும் பிரபலப்படுத்திய ‘ரெட் சல்யூட்.. ரெட் சல்யூட்’ என்கிற புரட்சிப் பாடலைச் சுருதியும் லயமும் சுத்தமாக இன்றைக்கும் பாடுகிறார். அவர்தான் ஒப்பற்ற புரட்சிப் பாடகியும் போராளியுமான பி.கே. மேதினி. அரசியல் வேறுபாடுகளைக் கடந்து கேரள மக்களால் ‘மேதினி சேச்சி’ என்று அன்போடு அழைக்கப்படும் இவர் சமுத்திரக்கனி, பரத் நடிப்பில், தற்போது வெளியாகியிருக்கும் ‘வீரவணக்கம்’ என்கிற படத்தில் பி.கே.மேதினியாகவே தோன்றியிருக்கிறார். தன் கலைப் பணிக்காகக் கேரள சங்கீத நாடக அகாடமி விருது பெற்றுள்ள அவர், இந்து தமிழ் திசைக்கு அளித்த நேர்காணலின் ஒரு பகுதி:
‘வீரவணக்கம்’ படத்தில் நடிக்க ஏன் ஒப்புக்கொண்டீர்கள்?
