வசனத்துக்கு அரியாசனம்! | கண் விழித்த சினிமா 27

வசனத்துக்கு அரியாசனம்! | கண் விழித்த சினிமா 27

Published on

சபா நாடக உலகில் புகழ் பெற்று, பின்னர் தன்னுடைய புகழ்பெற்ற நாடகங்கள் பலவும் திரைப்படங்கள் ஆனபோது, திரைக்கு எழுதிய பம்மல் சம்பந்த ரின் ‘மனோகரா’ (1936), ‘சபாபதி’(1941) போன்ற படங்களின் வசனத்தில் சமூக எள்ளல் எட்டிப் பார்த்தது. பம்மல் சம்பந்தர், ஷேக்ஸ்பியர் நாடகங்களின் கதை மற்றும் வசனங் களின் தாக்கத்தைத் தன்னுடைய நாடகங்களில் தழுவலாகவும் தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்பவும் பயன் படுத்திக்கொண்ட முதல் நாடகாசிரியர்.

ஆனால், அவருடைய வசனங்களில் இடம்பிடித்த ஐரோப்பியத் தன்மை, அதற்குரிய மேட்டிமைத் தனத்துடன் வெளிப்பட்டது. ஆனால், தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தின் இலக்கியச் செழுமையை எளிமைப் படுத்தி, அதன் கவித்துவம் குன்றாமல், எளிய அடுக்குமொழி வசனமாக, தமிழ் சினிமாவுக்குக் கொடுத்த முதல் கதை, வசனகர்த்தா இளங்கோவன்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in