

நன்றாக நடித்தால் ‘நடிகையர் திலகம்’ என்றும் சிறப்பாக நாட்டியம் ஆடினால் ‘நாட்டியப் பேரொளி’ என்றும் திறமையான கதாநாயகிகளைத் தமிழ்த் திரையுலகம் கொண்டாடி மகிழும். நடிப்பாலும் மக்களின் மனம் கவர்ந்த புன்னகையாலும் ‘புன்னகை அரசி’ என்று மங்கா புகழோடு விளங்கி வருபவர் கே.ஆர்.விஜயா. ‘நினைவில் நின்றவள்’ என்கிற நாயகியை முன்னிறுத்திய படத்தில் நடித்த அவர், ‘இந்து தமிழ் திசை’ வாசகர்களுக்காகத் தனது நினைவில் நின்ற மறக்க முடியாத பொக்கிஷங்களை இந்தப் பிரத்யேகப் பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
சென்னை, தி.நகரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி: