

சினிமாவில் நடித்து மக்களின் அன்பைப் பெற்றுவிட்டால் பணமும் புகழும் உறுதி என்றெண்ணியே கனவுலகைத் தேடிப் பலரும் வருகிறார்கள். ஆனால், அவர்களில் சிலர்தான், தங்கள் திறமையை அங்கீகரித்த சமூகத்துக்கும், அடையாளம் கொடுத்த கலையுலகத்துக்கும் கைமாறு செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களால்தான் நட்சத்திரம் என்கிற ஒளிவட்டத்தைக் கடந்து ‘மென்டார்’ என்கிற நிலைக்கு உயர முடிகிறது. தமிழில் சலனப் படக் காலம் ஒரு சகாப்தமாக மாற முடியாமல் போனாலும் சலனப் படக் காலத்தில் தொடங்கி, அடுத்த பெரும் பரிமாணத்துடன் கண் விழித்த பேசும் பட காலத்தின் முதல் பத்தாண்டுகள் வரை, அக்கலையை அடுத்த கட்டத் துக்கு நகர்த்திய ஆளுமைகள் வெகுசிலரே!