

காந்திஜியின் ஒத்துழை யாமை இயக்கம், தீண்டாமை எதிர்ப்பு, மதுவிலக்குப் பிரச்சாரம், சுதேசித்தயாரிப்புகளுக்கான ஆதரவு ஆகியவற்றை 1920களில் தொழில் முறை நாடகக் கலைஞர்கள் பாடல்கள் வழியாகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார்கள். பலர் போராட்டத்திலும் நேரடியாகப் பங்குபெற்றார்கள்.
திரையுலகில் நுழைந்து, நடிகர்களாக, இயக்குநர் களாகப் புகழ்பெற்றவர்கள் தேசபக்தி படங்களை எடுக்க முன்வந்தார்கள். அதேநேரம், இளவயது திருமணம், கைம்பெண் மறுமணம், பெண் கல்வி, தேவதாசி முறை ஒழிப்பு, ஆண்களின் பலதார மணம் எதிர்ப்பு உள்ளிட்ட பெண் விடுதலைக் கருத்துகளை முன்னெடுத்த குரல்கள் அக்கால கட்டத்தில் தீவிரம் பெறவில்லை.