

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாடகம் மிக முக்கியப் பொழுதுபோக்கு இயக்கமாக வளர்ந்து நின்றது. ஊர்தோறும் நாடக அரங்குகள் கட்டப்பட்டன. இருப்பினும் வயதில் மூத்த நடிகர்களின் தான்தோன்றித் தனத்தால் நாடகக் கலையின் உரையாடல் ‘வெட்டிப் பேச்சு’ என்கிற நிலைக்குத் தரமிறங்கியது.
அதற்குக் காரணமாக அமைந்தது ‘ஸ்பெஷல் நாடக வகை’. கம்பெனி நாடகத்திலிருந்து பிறந்த ஆடம்பர மான பொழுதுபோக்கு இது. டிக்கெட் விலையும் அதிகம். ராஜபார்ட் வேடங் கள், நாரதர் வேடம் ஆகியவற்றில் நல்ல பயிற்சியுடன் புகழ்பெற்று விளங்கிய பெரிய நடிகர்கள் வெவ்வேறு நாடகக் கம்பெனிகளின் அடையாளமாக விளங்கினர்.